லாலு மகன் முதல்வர்? காங்., அதிர்ச்சி

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

பாட்னா: விரைவில் நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலில் லாலு மகன் தேஜஸ்வியை முதல்வராக முன்னிறுத்த முயற்சிப்பதை கண்டு காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.latest tamil news


பீகார் மாநில சட்டசபைக்கான தேர்தல் வரும் அக்டோபர் -நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையடுத்து பா.ஜ.,த லைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியும், காங்., லுாலுவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி மற்றும் இதர கட்சிகள் உள்ளிட்டவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.லாலுவின் கட்சி தலைவராக தற்போது லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளார்.

இந்நிலையில், பாட்னாவில் லாலு கட்சியின் சார்பில் மகளிர் அமைப்பினர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வரும் சட்டசபை தேர்தலில் தேஜஸ்வியை முதல்வராக முன்னிறுத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

லாலுகட்சியின் இந்த முடிவு கூட்டணி கட்சியான காங்., உள்ளிட்டோரை அதர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், தேஜஸ்வி உயர்சாதி எதிர்ப்பு உருவத்தை வைத்துள்ளார் என கூறினர். ஆர்.ஜே.டிகட்சி ஒரு தலை பட்சமாக முடிவை எடுத்து இருப்பதாக பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின் இந்துஸ்தானிஅவாம் மோர்சா, ராஷ்டிரிய லோக்சமதா கட்சி, உள்ளிட்டகூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.


latest tamil newsஇதனிடையே காங்கிரஸ் கட்சியின் பீகார் மாநில பொறுப்பாளர் சக்திசங் கோஹில் கூறியதாவது: மாநில தேர்தலில் பா.ஜ.,வின் தோல்வியை உறுதி செய்ய காங்கிரஸ் தயாராகி வருகிறது. எங்களுடைய கூட்டணியில் இருப்பதை காட்டிலும் எதிர்தரப்பு கூட்டணியான பா.ஜ., ஜனதாதளம், மற்றும் ராம்விலாஸ் பஸ்வானின் எல்ஜேபி கூட்டணயில் சிக்கல் உருவாகி உள்ளது என கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
13-ஜூலை-202010:47:52 IST Report Abuse
Ray HOW FANTASTIC WE HUMANS ARE - IF WE HATE SOMEONE, WE TELL EVERYONE WITHOUT ANY FEAR IF WE LOVE SOMEONE, WE FEAR EVEN TO TELL THE LOVED ONE
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
13-ஜூலை-202007:48:35 IST Report Abuse
 Muruga Vel ரகுவன்ஸ்ராய் அவர்கள் படித்த திறமையான நிர்வாகி ..அவர் தலைவராகி முதல்வர் பதவிக்கு பொருத்தமானவர் ...தேஜஸ்வி ராகுல் ஒரே கேட்டகிரி
Rate this:
Cancel
CSCSCS - CHENNAI,இந்தியா
13-ஜூலை-202007:23:43 IST Report Abuse
CSCSCS அரசியல் வாதி ஆகவும் நுழைவு தேர்வு தேவை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X