இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் 62.93 சதவீதமாக உயர்வு

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020
Share
Advertisement

புதுடில்லி : இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்து 62.93 சதவீதமாக உள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசும் பல்வேறு கட்ட நடவடிக்கையை எடுத்து வருகிறது. ஆயினும் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவர்களின் சிறந்த சிகிச்சை முறையாலும், அரசின் நடவடிக்கையாலும், நோய் பாதிப்புகளில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் குணமடைந்து வருகின்றனர்.
நாட்டில் தொற்றுக்கு சிகிச்சையில் உள்ளவர்களை விட மீட்கப்பட்டவர்களின் விகிதம் சற்று அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரதுறை அதிகாரிகள் இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை கடந்துள்ள நிலையில், குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது.

மேலும் கட்டுப்பாட்டு மண்டலங்கள், கண்காணிப்பு நடவடிக்கைகள், சரியான நேரத்தில் தொற்றை கண்டறிதல் மற்றும் கொரோனா பாதிப்புகளின் திறமையான மருத்துவ மேலாண்மை ஆகியவற்றுடன் இணைந்து, கொரோனா நோயாளிகளிடையே மீட்கப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 19,235 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை 5,34,620 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நோய் பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டவர்களின் விகிதம் 62.93 சதவீதமாக உயர்ந்துள்ளது. நோய் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களை விட 2,42,362 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 2,92,258 பேர் சிகிச்சையில் உள்ளனர். நோய் தொற்றை பரிசோதிப்பதற்கான தடைகள் அகற்றப்பட்டுள்ளன.


latest tamil news



மேலும் கொரோனா சோதனையின் பாராட்டத்தக்க வளர்ச்சியில் ஒரு முக்கிய அங்கமாக தொற்றை பரிசோதனை செய்யும் ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அதன்படி, 795 அரசு மற்றும் 324 தனியார் பரிசோதனை மையங்கள் உள்ளன. நாட்டில் உள்ள 1,180 பரிசோதனை மையங்களில் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) 2,80,151 பேரின் மாதிரிகள்பரிசோதிக்கப்பட்டன. நோய் தொற்றுக்கு இதுவரை 1,15,87,153 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X