அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக அரசை விமர்சிக்க பா.ஜ., மேலிடம் பச்சைக்கொடி

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (46)
Share
Advertisement
admk, bjp, அதிமுக, பாஜ

'அ.தி.மு.க., ஆட்சியில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்; கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம்' என, தமிழக, பா.ஜ.,வுக்கு, அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலர் சந்தோஷ் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக பா.ஜ.,விற்கு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பின், சமீபத்தில் காணொலி காட்சி வாயிலாக, அறிமுகக் கூட்டம், நடந்தது. இதில், அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், தேசிய பொதுச்செயலர் முரளிதரராவ், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் உட்பட, 60 பேர் பங்கேற்றனர்.

சந்தோஷ் பேசுகையில், 'அ.தி.மு.க., அரசு தவறு செய்தால், கண்டித்து பேசுங்கள்; தவறுகளை துணிச்சலாக சுட்டிக்காட்டுங்கள். கூட்டணி பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். மக்கள் பிரச்னைகளுக்காக, அ.தி.மு.க.,வுக்கு எதிராக, துணிச்சலாக குரல் கொடுங்கள்' என்றார்.

கடந்த, 9ம் தேதி நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தில், முருகன் பேசுகையில், 'அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை நல்ல முறையில் அளிக்கப்படுவதாக கூறுகின்றனர். அப்படியிருக்கும் பட்சத்தில், அமைச்சர்கள், அங்கு சிகிச்சை பெற தயங்குவது ஏன்' என, கேள்வி எழுப்பினார்.

தனியார் மருத்துவமனையில், அமைச்சர்கள் சிகிச்சை பெறுவதை, முருகன் விமர்சித்துள்ளதால், அவர் மீது, அ.தி.மு.க., அதிருப்தி அடைந்துள்ளது. இதுதொடர்பாக, முருகனிடம், சில அமைச்சர்கள், தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்போது, அ.தி.மு.க., அரசை, பா.ஜ., விமர்சிக்க துவங்கியுள்ளதால், அ.தி.மு.க.,வும் கூட்டணியில் இருந்து, அக்கட்சியை கழற்றி விடுவதற்கு தயாராகி வருகிறது. அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து, பா.ஜ., வெளியேறும் பட்சத்தில், தி.மு.க., கூட்டணியிலிருந்து, காங்கிரசை வெளியேற்றும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
15-ஜூலை-202013:41:17 IST Report Abuse
narayanan iyer இதில் வருந்த இடமில்லை . அமைச்சர்கள் தான் பொதுமக்களுக்கு வழிகாட்ட வேண்டும் அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து அரசு சார்ந்த துறைகளை அரசே பயன்படுத்தினால்தான் அழகு . According to Tamil Nadu politics congress and BJP are same. No vote bank for them.
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
15-ஜூலை-202013:36:32 IST Report Abuse
narayanan iyer இதில் வருந்த இடமில்லை . அமைச்சர்கள் தான் பொதுமக்களுக்கு வழிகாட்ட வேண்டும் அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து அரசு சார்ந்த துறைகளை அரசே பயன்படுத்தினால்தான் அழகு .
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
14-ஜூலை-202000:05:35 IST Report Abuse
Visu Iyer மக்களுக்காக பணி செய்ய இவர்களை தேர்வு செய்தால்.. இவர்கள் கட்சிக்காக பணி செய்கிறார்கள்.. இவர்களை புறம் தள்ளுங்கள்.. விரைவில் தேர்தலை எதிர் கொள்ளுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X