அதிமுக அரசை விமர்சிக்க பா.ஜ., மேலிடம் பச்சைக்கொடி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக அரசை விமர்சிக்க பா.ஜ., மேலிடம் பச்சைக்கொடி

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (46)
Share
admk, bjp, அதிமுக, பாஜ

'அ.தி.மு.க., ஆட்சியில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்; கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம்' என, தமிழக, பா.ஜ.,வுக்கு, அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலர் சந்தோஷ் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக பா.ஜ.,விற்கு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பின், சமீபத்தில் காணொலி காட்சி வாயிலாக, அறிமுகக் கூட்டம், நடந்தது. இதில், அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், தேசிய பொதுச்செயலர் முரளிதரராவ், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் உட்பட, 60 பேர் பங்கேற்றனர்.

சந்தோஷ் பேசுகையில், 'அ.தி.மு.க., அரசு தவறு செய்தால், கண்டித்து பேசுங்கள்; தவறுகளை துணிச்சலாக சுட்டிக்காட்டுங்கள். கூட்டணி பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். மக்கள் பிரச்னைகளுக்காக, அ.தி.மு.க.,வுக்கு எதிராக, துணிச்சலாக குரல் கொடுங்கள்' என்றார்.

கடந்த, 9ம் தேதி நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தில், முருகன் பேசுகையில், 'அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை நல்ல முறையில் அளிக்கப்படுவதாக கூறுகின்றனர். அப்படியிருக்கும் பட்சத்தில், அமைச்சர்கள், அங்கு சிகிச்சை பெற தயங்குவது ஏன்' என, கேள்வி எழுப்பினார்.

தனியார் மருத்துவமனையில், அமைச்சர்கள் சிகிச்சை பெறுவதை, முருகன் விமர்சித்துள்ளதால், அவர் மீது, அ.தி.மு.க., அதிருப்தி அடைந்துள்ளது. இதுதொடர்பாக, முருகனிடம், சில அமைச்சர்கள், தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்போது, அ.தி.மு.க., அரசை, பா.ஜ., விமர்சிக்க துவங்கியுள்ளதால், அ.தி.மு.க.,வும் கூட்டணியில் இருந்து, அக்கட்சியை கழற்றி விடுவதற்கு தயாராகி வருகிறது. அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து, பா.ஜ., வெளியேறும் பட்சத்தில், தி.மு.க., கூட்டணியிலிருந்து, காங்கிரசை வெளியேற்றும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X