பாக்.,கில் ஹிந்து கோவில் கட்ட உலேமா வாரியம் ஆதரவு

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Pakistan, Hindu Temple, Ulema Council,பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஹிந்து கோவில் கட்ட, சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுத்து வரும் உலேமா வாரியம் ஆதரவு தெரிவித்துள்ளது.

பாக்., தலைநகர் இஸ்லாமாபாதில், முதல் முறையாக கிருஷ்ணர் கோவில் கட்ட, சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக, 20 ஆயிரம் சதுர அடி நிலத்தை, தலைநகர மேம்பாட்டு ஆணையம் ஒதுக்கியது. இதற்கு, பிரதமர் இம்ரான் கானின் கூட்டணி கட்சியான, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - குவைட் உட்பட, பல்வேறு தரப்பில் இருந்தும், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இஸ்லாமாபாதில், கோவில் கட்ட தடை விதிக்க வேண்டும் என்றும், அதற்கு வழங்கப்பட்ட நிலத்தை திரும்ப பெறக் கோரியும், பாக்., நீதிமன்றத்தில், மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை, பாக்., நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


latest tamil news



இந்நிலையில், பாக்.,கில் சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுத்து வரும் உலேமா வாரியம், ஹிந்து கோவில் கட்ட ஆதரவு தெரிவித்துள்ளது. முஸ்லிம் மதத்தலைவர்களின் இந்த போக்கு சரியானதல்ல என கண்டனம் தெரிவித்துள்ள அந்த வாரியத்தின் தலைவர், ஹிந்து கோவில் கட்டுவது தொடர்பான சர்ச்சையையும் கண்டித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi - Danbury,யூ.எஸ்.ஏ
13-ஜூலை-202005:05:51 IST Report Abuse
Ravi நக்கல் சொல்வது சரியே எழுபது வருடங்களுக்கு மேலாக பொறுத்து கொண்டீர்கள் இன்னும் ஒரு பத்து ஆண்டுக்குள் இந்திய ராணுவம் உங்களை மீட்கவரும் அதன்பின் பாக்கிஸ்தான் என்ற நாடும் இருக்காது அது பலநாடுகளாக பிரிந்துவிடும் - சிந்து பலுசிஸ்தான் போன்றவை இந்து நாடாகவும் மற்றவை வேறு நாடுகளாகும். சில இந்தியாவுடன் இணையும் அதுவரை வீட்டிலேயே அல்லது கிழக்கு நோக்கி சூரியனை வழிபடுங்கள் உங்களுக்கு சீக்கிரமே விடிவு காலம் வரும் கோவில் என்று ஒன்றிருந்தது அதில் எல்லோரும் கூடும்போது எவனாவது - (தீவீரவாதி என்றில்லை) எல்லோரையும் கைலாசம் அனுப்பிவிடுவார்கள் இப்போதைக்கு உலேமா மற்றும் இந்துக்களுக்காக குரல் கொடுக்கும் பாக்கிஸ்தான் மாணவர்களுக்கு நன்றி
Rate this:
Cancel
Venkatesh Bala - bay area,யூ.எஸ்.ஏ
13-ஜூலை-202004:55:39 IST Report Abuse
Venkatesh Bala அறுபது வருடத்தில் ஒரு இந்து கோவில் கட்ட முடியவில்லை . இங்கு இருக்கும் இஸ்லாமியர்கள் இந்தியாவில் அனுபவிக்கும் சுதந்திரத்தை புரிந்துகொண்டால் சரி
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-ஜூலை-202004:51:58 IST Report Abuse
J.V. Iyer அங்கு ஹிந்து கோவில் கட்டாமல் இருப்பதே நல்லது. கட்டியபிறகு, அங்கு வரும் ஹிந்துக்களை ஆணாக இருந்தால், கொல்வதற்கும், சிறிய பெண்களாக இருந்தால் தூக்கி கொண்டுபோய் மணம்முடிக்கவும் ஏதுவாக இருக்கும். ஓரிடத்தில் இந்த செயல்களை எளிதாக செய்யலாம். ஏன் வம்பு. கடவுள் எங்கும் இருக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X