பெண் போலீசிடம் குஜராத் அமைச்சர் மகன் வாக்குவாதம்

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement

சூரத்: உங்களை ஒரே இடத்தில் ஒரு வருடம் வரையில் நிற்க வைக்க முடியும் என்று பெண் போலீசிடம் குஜராத் அமைச்சரின் மகன் மற்றும் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.latest tamil newsகுஜராத் மாநிலத்தில் வரச்சா சாலை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குஜராத் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

சூரத்தின் மங்கத் சவுக் பகுதியில் இரவு நேரத்தில் பெண் போலீஸ் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது முக கவசம் அணியாமல் காரில் வந்து கொண்டிருந்த நபர்களை நிறுத்தி விசாரித்து கொண்டிருந்தார். அவர்கள் தங்கள் நண்பரான பிரகாஷ் கனானியை அழைத்தனர். இவர் மாநிலசுகாதாரத்துறை அமைச்சரின் மகனாவார்.

இதனிடையே பெண் போலீஸ் ,கொரோனா வைரஸைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது, ​​முகமூடி அணியாமல் காரில் சுற்றித் திரிந்த ஐந்து பேரை தடுத்து நிறுத்தியபோது, ​​அவர்கள் அமைச்சர் கனானியின் மகன் பிரகாஷை அழைத்ததாக அவர் தனது உயர் அதிகாரிக்கு தகவல் அளித்தார்.


latest tamil newsசம்பவ இடத்திற்கு வந்த பிரகாஷ் கனானி நண்பர்களை விடுவிக்குபடி கூறி பெண் போலீசிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார்.ஒரு கட்டத்தில் உங்களை ஒரு வருடம் நிற்க வைக்க முடியும் என மிரட்டும் வகையில் பேசிஉள்ளார்.

அதற்கு பெண் போலீஸ் தங்களின் அடிமையோ அல்லது பிதாக்களின் வேலைக்கார்களோ இல்லை எனபதில் அளித்து உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. சம்பவம் நடைபெற்ற ஒருநாள் கழிந்த பின்னரே அமைச்சரின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இது குறித்து அசிஸ்டன்ட் கமிஷன் (சிறப்புபிரிவு) சவுத்ரி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும், பெண் போலீஸ் விடுமுறையில் சென்றிருப்பதாகவும் கூறினார்.


latest tamil newsஇதனிடையே அமைச்சர் குமார் கனானி சம்பவம் குறித்து கூறுகையில் தனதுமகன் பிரகாஷ் அவரது மாமனாரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது பெண் போலீஸ் நிறுத்தி உள்ளார். இருதரப்பினரும் ஓருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜூலை-202008:56:38 IST Report Abuse
மு. செந்தமிழன் உண்மையின் உரைகல் தினமலரில் பிற மாநில செய்திகள் வரும்போது, இந்த கட்சியியை சேர்ந்த இவர் முதல்வராக உள்ளார் என்று இருக்கும், ஆனால் இந்த செய்தியில் அப்படி இல்லையே ஏனோ. ஒருவேளை குஜராத்தை ஆள்வது பா. ஜ க என்று உரைகல்லுக்கு தெரியாதோ.
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜூலை-202023:18:25 IST Report Abuse
தமிழ்வேல் இது முதல் முறை அல்ல.... சொல்லி சொல்லி சலிச்சிப் போச்சி. புருஷ் ஜி ஒரு மறதின்னு சொன்னாரு.😁...
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
13-ஜூலை-202008:38:12 IST Report Abuse
vbs manian இது பி ஜே பி க்கு எச்சரிக்கை .காங்கிரஸின் அழிவு இந்த மாதிரி நிகழ்வுகளிலிருந்து தான் ஆரம்பித்தது..இதை கண்டும் காணாமல் விட்டுவிட்டால் கரையான் பி ஜே பி யையும் அறிக்க தொடங்கி விடும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஜூலை-202007:24:27 IST Report Abuse
Lion Drsekar "இது குறித்து அசிஸ்டன்ட் கமிஷன் (சிறப்புபிரிவு) சவுத்ரி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும், பெண் போலீஸ் விடுமுறையில் சென்றிருப்பதாகவும் கூறினார்.." இதுதான் முடிவு என்பதை முன்பே அறிந்து கொண்டால் பிழைத்துக்கொள்ளலாம், வந்தே மாதரம்
Rate this:
வல்வில் ஓரி - அடுத்தவர் ID திருடும் ,பஞ்சம பரதேசி ,இந்தியா
13-ஜூலை-202021:51:26 IST Report Abuse
வல்வில் ஓரிneramai spl andha aama matrapatuvittar nee jalara adika thaan layakku eppadi lions club membaro theriyala...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X