பொது செய்தி

தமிழ்நாடு

48 மணி நேர, 'இ - பாஸ்' பரிசோதனை தேவையா?

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Corona Virus, Epass, Covid19, TamilNadu

ஒரு மாவட்டத்தில் இருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு, அவசர வேலையாக சென்று வருவோருக்கு, தேவையின்றி கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகம் முழுதும், ஊரடங்கு காரணமாக, ஒரு மாவட்டத்தில் இருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல, இணையதளத்தில் விண்ணப்பித்து, 'இ -- பாஸ்' பெற வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, 'இ- - பாஸ்' பெற்று செல்வோருக்கு, அவர்கள் செல்லும் மாவட்ட எல்லையில், கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அத்துடன், 14 நாட்கள் தனிமையில் வைக்கப்படுகின்றனர்.

அந்த மாவட்டத்தில் தங்கியிருப்பதற்காக செல்வோருக்கு, கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதில் தவறில்லை. ஆனால், உடனடியாக திரும்புவதற்காக, 48 மணி நேர, 'இ- - பாஸ்' பெற்று செல்வோருக்கும், தேவையின்றி பரிசோதனை நடத்தப்படுகிறது.

'ஒருவர் உடனடியாக திரும்ப முடிவு செய்து, 48 மணி நேர, இ- - பாஸ் பெற்று வருகிறார். அவருக்கு ஏன் கொரோனா பரிசோதனை நடத்துகிறீர்கள்' என, கேட்டால், 'அவர்கள் நோயை பரப்பி விடுவர். எனவே, பரிசோதனை செய்கிறோம்' என, கூறுகின்றனர். பரிசோதனை மாதிரி எடுத்த பின், அவரை மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர்.

பரிசோதனை முடிவு வருவதற்கு முன்னதாக, அவர் வந்த வேலை முடிந்து, சொந்த மாவட்டத்திற்கு திரும்பி விடுகிறார். இதனால், ஒரு பரிசோதனை உபகரணம் வீணடிக்கப்படுகிறது.பரிசோதனை அவசியம் என்றால், முடிவு தெரியும் வரை, அவரை மாவட்டத்திற்குள் அனுமதிக்கக் கூடாது;

48 மணி நேர, இ- - பாஸ் வழங்கக் கூடாது. எவ்வித சோதனையுமின்றி, 48 மணி நேரத்தில் சென்று வர, இ- - பாஸ் வழங்கிவிட்டு, பின், பரிசோதனை நடத்துவது தேவையற்றது.

- நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
13-ஜூலை-202013:38:47 IST Report Abuse
Sathiamoorthy.V அறிவு ஜீவிகள் .
Rate this:
Cancel
குஞ்சுமணிதாசன் - Kailasa ,ஈக்வடார்
13-ஜூலை-202009:58:46 IST Report Abuse
குஞ்சுமணிதாசன் உதயநிதி மாறி எல்லோரும் குண்டலினி கத்துக்கணும் ....ஒரு செகண்ட்லே யாருக்கும் தெரியாம சக்திமான் மாறி சாத்தான்குளம் போயிட்டு திரும்பி வந்துடலாம்
Rate this:
Cancel
Perumal - Chennai,இந்தியா
13-ஜூலை-202009:44:17 IST Report Abuse
Perumal Nice article.It reflects general public views.Why a normal person is to be tested that too in a place where you can easily become Covid positive.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X