எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வில் சேர குஷ்புக்கு அழைப்பு

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
'காங்கிரசில், குஷ்புவின் உழைப்பு வீணாகாமல் இருக்க, பா.ஜ.,வில், அவர் இணைய வேண்டும்' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். 'காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, சச்சின் பைலட்டை நியமித்திருக்க வேண்டும்' என, சமூக வலைதளங்களில், ராகுலுக்கு எதிராக எழுந்த கருத்துக்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆதரவு தெரிவித்தார். இதனால், குஷ்புவுக்கு எதிராக, தமிழக இளைஞர்
BJP, Congress, kushboo

'காங்கிரசில், குஷ்புவின் உழைப்பு வீணாகாமல் இருக்க, பா.ஜ.,வில், அவர் இணைய வேண்டும்' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

'காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, சச்சின் பைலட்டை நியமித்திருக்க வேண்டும்' என, சமூக வலைதளங்களில், ராகுலுக்கு எதிராக எழுந்த கருத்துக்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆதரவு தெரிவித்தார். இதனால், குஷ்புவுக்கு எதிராக, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா உள்ளிட்ட நிர்வாகிகள், கடும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் சவுமியா மணி, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'ராகுல் தலைமையை, நீங்கள் விரும்பவில்லை என்பதை முன்கூட்டியே உணர்ந்ததால் தான், பா.ஜ.,வில் குஷ்பு இணைய இருக்கிறார் என்ற, செய்தி பரவியது போலும்.

'இனியும் தாமதிக்காமல், பா.ஜ.,வில் சேர்ந்து விடுங்கள்' என, கூறியுள்ளார். காங்கிரஸ் மனித உரிமை பிரிவு துணை தலைவராக இருந்த தாஸ் பாண்டியன், பா.ஜ.,வில் இணைந்து, தற்போது, மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது அறிக்கை:தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து, குழப்பத்தை ஏற்படுத்துகிறார். குஷ்புவும், இளைஞர் காங்கிரசாரால் விமர்சிக்கப்பட்டுள்ளார். உழைப்பவர்களை, காங்கிரஸ் கைவிட்டு விடும். எனவே, தன் உழைப்பு வீணாகாமல் இருக்க, பா.ஜ.,வில் இணைந்தால், குஷ்புக்கு அரசியல் எதிர்காலம் உண்டு.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

இதேபோல, வேறு சில பா.ஜ., தலைவர்களும், நடிகை குஷ்பு, பா.ஜ.,வில் இணைய வேண்டும் என, அழைப்பு விடுத்து உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வருங்கால முதல்வர் துன்பநிதி  - கோபாலநாயக்கன்பட்டி ,இந்தியா
18-ஜூலை-202017:27:49 IST Report Abuse
வருங்கால முதல்வர் துன்பநிதி  வேலியில் போகும் ஓணானை மடியில் கட்டிக்கொண்ட கதையாகிவிடும்...
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16-ஜூலை-202015:24:25 IST Report Abuse
skv srinivasankrishnaveni பிஜேபி நன்னாயிருக்குறதுபிடிக்கலியா ஐயா ப்ளீஸ் ஆளைவிடுங்க இதுபோல கேனகோமாளித்தனம் செய்யாதீங்க அசிங்கமாயிருக்கு கான் கிரேஸ் கட்டின்னு அழுவட்டும்
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
14-ஜூலை-202022:20:26 IST Report Abuse
KavikumarRam இப்படி ஒன்னு நடந்தா பாஜக அழிவை நோக்கி திரும்புதுன்னு அர்த்தம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X