பா.ஜ.,வில் இணைகிறார் சச்சின் பைலட் ?இன்று நட்டாவை சந்திக்கிறார்

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள துணை முதல்வர் சச்சின் பைலட், தன் ஆதரவு, எம்.எல்,ஏ.,க்களுடன், டில்லியில் முகாமிட்டுள்ளார். சச்சின் பைலட் இன்று, (ஜூலை 13) பா.ஜ.வில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அவரை சமாதானப்படுத்த, மேலிட துாதர்களாக, அஜய் மகேன், ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் ஜெய்ப்பூர்
Ashok Gehlot, minority, Sachin Pilot

புதுடில்லி ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள துணை முதல்வர் சச்சின் பைலட், தன் ஆதரவு, எம்.எல்,ஏ.,க்களுடன், டில்லியில் முகாமிட்டுள்ளார். சச்சின் பைலட் இன்று, (ஜூலை 13) பா.ஜ.வில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அவரை சமாதானப்படுத்த, மேலிட துாதர்களாக, அஜய் மகேன், ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் ஜெய்ப்பூர் விரைந்துள்ளனர்.


latest tamil news




சச்சின் பைலட் நேற்று இரவு (ஜூலை 12) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:எனக்கு, 30 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. ராஜஸ்தானில் கெலாட் அரசு, பெரும்பான்மையிழந்து விட்டது. ஜெய்ப்பூரில் அசோக் கெலாட் தன் வீட்டில், இன்று, (ஜூலை 13) காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் நானும், என் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும், பங்கேற்க மாட்டோம். காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க, எனக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


பா.ஜ.வில் இணைய முடிவு


மத்திய பிரதேசத்தில், முன்னர் கமல்நாத் தலைமையில் இருந்த, காங்., ஆட்சி கவிழ்ந்தது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைந்தது. பா.ஜ.,வில் சிந்தியா சேர்ந்த போது, காங்கிரசிலிருந்து சச்சின் பைலட்டும் விலகி, பா.ஜ.,வில் சேர உள்ளதாக தகவல்வெளியானது. இதை, சச்சின் பைலட் மறுக்கவும் இல்லை; ஒப்புக்கொள்ளவும் இல்லை. தற்போது சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் இன்று, (ஜூலை 13) பா.ஜ. தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து அக்கட்சியில் இணையப்போவதாக என்.டி..டி.வி. செய்தி சானல் வாயிலாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-ஜூலை-202017:38:08 IST Report Abuse
Malick Raja ஒவ்வொரு மாநிலமாக ஆட்சி கவிழ்ப்பு செய்வதிலே தனித்திறமை கொண்டவர்களால் ராஜஸ்தானில் பாச்சா பலிக்காமல் இருப்பது அவர்களின் திறமையில் இடி விழுந்தது போல ஆகிவிடாமலிருக்க முடிந்தவரை முயற்சிக்க மேலிட உத்தரவு என்பது உலகறிந்த உண்மை .. பாவம் கொரோனா இருப்பதை மறந்துவிட்டார்கள் .. கொரோனா சும்மா விடாது உரியதை செய்து முடித்துவிடும் .. பெரிய தலைகளை இதுவரை பதம்பார்க்கவில்லை பதம்பார்க்கும் என நினைக்கலாம் ..
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-ஜூலை-202005:14:32 IST Report Abuse
J.V. Iyer திறமையானவர்களுக்கு காங்கிரஸில் இடமில்லை.
Rate this:
Cancel
13-ஜூலை-202013:27:33 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) இத்தாலிய குடும்பம் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவது நல்லது , இல்லையென்றால் கட்சி காணாமல் போவது உறுதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X