பொது செய்தி

இந்தியா

கேரளாவில் புதிதாக 435 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
kerala, corona, covid 19, coronavirus, kerala news, கேரளா, கொரோனா, தொற்று, பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக கடந்த 24 மணிநேரத்தில் 435 பேருக்கு கொரோனா உறுதியானது.

இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 7,873 ஆனது. புதிதாக பாதிப்பு அடைந்தவர்களில் 128 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 87 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் மற்றும் 206 பேர் மற்றவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் என அறியப்பட்டது. கொரோனாவுக்கு இதுவரை 31 பேர் பலியாகி உள்ளனர்.

அதிகபட்சமாக பாலக்காடு மாவட்டத்தில் 59 பேருக்கும், ஆலப்புழா மாவட்டத்தில் 57 பேருக்கும், காசர்கோடு மாவட்டத்தில் 56 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 50 பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தில் 42 பேருக்கும், திருவனந்தபுரம் மாவட்டத்தில் 40 பேருக்கும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 39 பேருக்கும், திருச்சூர் மற்றும் வயநாடு மாவட்டங்களில் தலா 19 பேருக்கும், கண்ணூர் மாவட்டத்தில் 17 பேருக்கும், இடுக்கி மாவட்டத்தில் 16 பேருக்கும் கோட்டயம், இடுக்கி மாவட்டத்தில் 12 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தில் 5 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.


latest tamil news


அங்கு சிகி்ச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3,743 ஆக உள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 4,097 பேர் குணமடைந்தனர். கடந்த ஒரு நாளில் 13,478 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. 1,81, 784 பேர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். பாதிப்பு தொடர்வதையடுத்து புதிதாக 30 கட்டுப்படுத்தப்படுத்தப்பட்ட பகுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 222 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. இவ்வாறு அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஜூலை-202010:51:01 IST Report Abuse
Bhaskaran அறிவித்தது பாதி மறைத்தது மீதி .இவர்களை நம் ஊர் புத்திசாலிகள் பாராட்டி அறிக்கை விட்டது நினைவுக்கு வருது
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
13-ஜூலை-202009:49:15 IST Report Abuse
Balasubramanian Ramanathan கேரளாவை பார்த்து எடப்பாடி பழனிச்சாமி கற்றுக்கொள்ள ஸ்டாலின் வலியுறுத்தல். ஸ்டாலின் கருத்துக்கு மக்கள் மையம் தலைவர் பாராட்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X