பா.ஜ.,வில் இணைந்த காங்., -- எம்.எல்.ஏ.,| Bada Malhera MLA Pradhyuman Singh Lodhi joins BJP | Dinamalar

பா.ஜ.,வில் இணைந்த காங்., -- எம்.எல்.ஏ.,

Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (5)
Share
politics, congress, bjp, Bada Malhera MLA, Pradhyuman Singh Lodhi, madhya pradesh

போபால் :மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ், எம்.எல்.ஏ., கட்சியில் இருந்து விலகி, முதல்வர் முன்னிலையில் நேற்று, பா.ஜ.,வில் இணைந்தார்.

மத்திய பிரதேசத்தின் சதர்பூர் மாவட்டம், படா மல்ஹெரா தொகுதியில் இருந்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில், எம்.எல்.ஏ.,வாக தேர்வானவர், பிரதியுமான் சிங் லோதி. இவர், எம்.எல்.ஏ., பதவியை, நேற்று முன்தினம் ராஜினாமா செய்த நிலையில், அதை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, காங்., கட்சியின் உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்தார்.


latest tamil news
இதையடுத்து ஆளுங்கட்சியான, பா.ஜ., மாநில தலைமை அலுவலகத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில், நேற்று அக்கட்சியில் இணைந்தார்.ம.பி., மாநில காங்கிரசில் இருந்து மார்ச் மாதம், 22 எம்.எல்.ஏ.,க்கள் விலகினர். இதையடுத்து, அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.ஆட்சியை, பா.ஜ., கைப்பற்றியது. தற்போது, காங்.,கில், மேலும் ஒருவர் விலகியதால், சட்டசபையில் அக்கட்சி, எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, 91 ஆக குறைந்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X