சொகுசு காரால் பிரதமர் கோபம்

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (56)
Share
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடி எவ்வளவு பிசியாக இருந்தாலும், தினமும், நாளிதழ்களை ஒரு நோட்டம் விடுவார். அவர், அப்படி படித்த போது, ஒரு செய்தி அவரது கண்களை உறுத்தியது. பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்கின் சேர்மன், இரண்டு ஆடி சொகுசு கார்களை வாங்கியிருக்கிறார் என்ற செய்தி தான் அது.இந்த வங்கி தான், பண மோசடி செய்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பியோடிய நிரவ்

புதுடில்லி: பிரதமர் மோடி எவ்வளவு பிசியாக இருந்தாலும், தினமும், நாளிதழ்களை ஒரு நோட்டம் விடுவார். அவர், அப்படி படித்த போது, ஒரு செய்தி அவரது கண்களை உறுத்தியது. பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்கின் சேர்மன், இரண்டு ஆடி சொகுசு கார்களை வாங்கியிருக்கிறார் என்ற செய்தி தான் அது.latest tamil newsஇந்த வங்கி தான், பண மோசடி செய்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பியோடிய நிரவ் மோடிக்கு, கோடிக்கணக்கில் கடன் கொடுத்திருந்தது. பிரதமர் மோடி, உடனே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு போன் செய்தார். 'கொரோனா பரவலையடுத்து, நாம், அரசு செலவுகளை குறைத்து கொண்டிருக்கிறோம். 'அப்படி இருக்கையில் இந்த வங்கி சேர்மன், கோடிக்கணக்கில் வங்கி பணத்தை செலவு செய்து கார் வாங்கியிருக்கிறார்; என்ன தான் நடக்கிறது' எனக் கேட்டாராம் பிரதமர்.

அடுத்த நிமிடம், நிதி அமைச்சர், அந்த வங்கி சேர்மனுக்கு போன் போட்டார். 'நீங்கள் இரண்டு ஆடி கார்களை வாங்கியிருக்கிறீர்களா' என அவர் கேட்க, சேர்மனுக்கு வியர்த்து விட்டது. 'கொரோனா பரவல் சமயத்தில், ஏன் இவ்வளவு செலவு செய்தீர்கள்' என, ஒரு பிடி பிடித்தார் நிதி அமைச்சர். 'நீங்கள் வேலையில் தொடர வேண்டுமானால், அந்த கார்கள் உங்களிடம் இருக்கக் கூடாது; இது பிரதமரின் உத்தரவு' என சொல்லி, போனை வைத்துவிட்டார் நிர்மலா சீதாராமன்.


latest tamil newsஅடுத்த நாளே, 'அந்த கார்களை திருப்பி கொடுத்துவிட்டேன்' என வங்கி சேர்மனிடமிருந்து, நிர்மலாவுக்கு போன் வந்தது. உடனே அவர் பிரதமருக்கும் இந்த விஷயத்தை சொல்லி விட்டார்.அத்துடன் அனைத்து பொதுத் துறை வங்கி சேர்மன்களுக்கும், 'தேவையில்லாமல் எந்த பொருளையும் அதிக விலை கொடுத்து வாங்கவே கூடாது' என, எச்சரிக்கையும் விடப்பட்டது.அந்த வங்கி சேர்மன் கார் வாங்கியதை, கூடவே இருந்த ஒரு அதிகாரி, 'லீக்' செய்யவே, அது செய்தியாக வெளியாகி, பிரதமர் மோடி வரைக்கும் போய்விட்டது.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat - Pondicherry,இந்தியா
19-ஜூலை-202007:02:56 IST Report Abuse
Venkat சாயிராம் 25 வருடம் முன் ஏழை. இன்று குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் திடீர் தொழில் அதிபர்களாகவும், பெரும் பணக்காரர்கள் வியாபாராமான IPL கிரிக்கட் குழு விலைக்கு வாங்குபவர்களும், ரயில் சென்னை வந்தவர்களின் குடும்பம் இன்று விமான கம்பெனியையே விலைக்கு வாங்கியவர்களுக்கும், ஓட்டு வீடுகூட இல்லாத நபர்களின் பிள்ளைகள் இன்று தனி தீவும், அதில் மிகப்பெரிய பங்களாவும் என திடீர் வசிதியாளர்களாகவும், ஜனநாயக முறையில் அண்ணா தேற்றுவித்த திமுக கட்சியை குடும்ப வாரிசு கட்சியாக மாற்றியவர்களுக்கும் மோடியின் எளிய, நேர்மையான நடவடிக்கைகளை எப்படி புரிந்து கொள்ளமுடிவும். குடும்ப அரசியலுக்கு வசதியாக துதிபாடும் கூட்டம் வேறு சேர்ந்துக்கொண்டனர். பின் எப்படி புரியும்? பாவம் இதில் புலம்பல்கள் வேறு. நேர்மையானவர்களு மட்டுமே இது புரியும் ஐயா. சாயிராம்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
17-ஜூலை-202009:11:46 IST Report Abuse
g.s,rajan Modiji then why the petrol and diesel price and raising the tax every day ???Are you reading the daily news of the Skyrocketing raising of fuel prices in India ???we hope that you are in India only. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel
வருங்கால முதல்வர் துன்பநிதி  - கோபாலநாயக்கன்பட்டி ,இந்தியா
15-ஜூலை-202017:12:42 IST Report Abuse
வருங்கால முதல்வர் துன்பநிதி  சமாதியில் தயிர்வடை வைத்து வழிபடும் முரசொலி உ.பிகளுக்கு இந்த செய்தியை நம்ப முடியாமல் போனதில் வியப்பில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X