பொது செய்தி

இந்தியா

கொரோனா குறித்த அச்சம் வேண்டாம்: வைரலாகும் அமிதாப் வீடியோ

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020
Share
Advertisement
covid 19, coronavirus, amitabh bachchan, mumbai news, coronavirus outbreak

மும்பை: பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப் பச்சன், 77. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவரது மகன் அபிஷே க் பச்சனுக்கு கொரோனா உறுதியானது. லேசான கொரோனா அறிகுறியுடன், மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அமிதாப் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியது, கொரோனா குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. நெருக்கடியான இந்த இக்கட்டான சூழ்நிலைகளில், வெள்ளை கோட்டில் உள்ள மருத்துவர்கள் கடவுளின் உருவம்., அவர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து நமது உயிர்களை காப்பாற்றுகிறார்கள்.


latest tamil news




நானாவதி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கொடிய வைரசிலிருந்து அனைவரும் கண்டிப்பாக மீண்டு வருவோம். இவ்வாறு கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X