தமிழ்நாடு

கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி இறப்பதை தடுக்க, புதிதாக 680 படுக்கைகளில் ஆக்ஸிஜன் இணைப்பு

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020
Share
Advertisement
மதுரை, மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி இறப்பதை தடுக்க, புதிதாக 680 படுக்கைகளில் ஆக்ஸிஜன் இணைப்பு ஏற்படுத்தும் பணி துவங்கியது.சென்னைக்கு அடுத்தப்படியாக அதிக பலி ஏற்படும் மாவட்டம் மதுரை. தினமும் 10 பேர் இறக்கின்றனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மரணங்கள் நிகழ்வதை தவிர்க்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. முதற்கட்டமாக அரசு பல்நோக்கு
கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி இறப்பதை தடுக்க, புதிதாக 680 படுக்கைகளில் ஆக்ஸிஜன் இணைப்பு

மதுரை, மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி இறப்பதை தடுக்க, புதிதாக 680 படுக்கைகளில் ஆக்ஸிஜன் இணைப்பு ஏற்படுத்தும் பணி துவங்கியது.சென்னைக்கு அடுத்தப்படியாக அதிக பலி ஏற்படும் மாவட்டம் மதுரை. தினமும் 10 பேர் இறக்கின்றனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மரணங்கள் நிகழ்வதை தவிர்க்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
முதற்கட்டமாக அரசு பல்நோக்கு மருத்துவமனை, தலைக்காய சிகிச்சைப் பிரிவு, தோப்பூரில் 477 ஆக்ஸிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது மேலும் 680 ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கும் பணி நடக்கிறது.தினமும் கொரோனா பாதிப்பு உயர்கிறது. மூச்சுத்திணறலில் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இவர்களை தொற்றில் இருந்து மீட்கும் வகையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கும் பணியை துரிதமாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
1157 படுக்கைகள்
டீன் சங்குமணி கூறுகையில், ''தோப்பூரில் 2 ஆயிரம் லிட்டர் திரவநிலை ஆக்ஸிஜன் டேங்க் நிறுவப்பட்டுள்ளது. அங்கு 62 ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்ளன. மேலும் 150 படுக்கைகளுக்கு இணைப்பு கொடுக்கப்படும். பல்நோக்கு மருத்துவமனை, தலைக்காய சிகிச்சை பிரிவுகளில் மேலும் 530 ஆக்ஸிஜன் படுக்கைகளுக்கு இணைப்பு கொடுக்கிறோம். மொத்த ஆக்ஸிஜன் படுக்கைகள் 1157 ஆக உயரும்,'' என்றார்.
* ஆக்ஸிஜன் படுக்கை
எங்கு... எவ்வளவு...இடம் /இருப்பது /தயாராவதுபல்நோக்கு மருத்துவமனை /318 /150தலைக்காய சிகிச்சைப் பிரிவு/ 97 /380தோப்பூர் நுரையீரல் மருத்துவமனை/ 62 /150மொத்தம்/ 477 /680

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X