பொது செய்தி

தமிழ்நாடு

சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

கோவை:கோவையில் உள்ள சைக்கிள் கடைகளில் கடந்த மாதம், 25-30 சதவீத அளவு விற்பனை அதிகரித்துள்ளது; ஊரடங்கு அமலில் இருப்பதால், பலரும் 'சைக்கிள் கிளப்'பில் இணைந்து வருகின்றனர்.ஜிம், விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டுள்ளதால், உடலை 'பிட்' ஆக வைத்துக்கொள்ள, சைக்கிள் ஓட்டுவதை பலரும் பழக்கமாக்கி வருகின்றனர். கோவையில் இதன் விற்பனை, கணிசமாக அதிகரித்து வருவதாக, கூறுகின்றனர்விற்பனையாளர்கள்.latest tamil newsஇதுகுறித்து, விற்பனையாளர்கள் சிலர் கூறியதாவது:கடந்தாண்டு ஜூன் மாதம், பத்து லட்சம் ரூபாய்க்கு சைக்கிள் விற்பனையானது. நடப்பாண்டு ஜூன் மாதம், 17-18 லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனை செய்துள்ளனர்.பொது போக்குவரத்து தடைபட்டுள்ளது காரணமாக இருக்கலாம். கொரோனா தொற்று காரணமாக, தனியார் வாகனங்களில் பயணிப்பதை, பாதுகாப்பு இல்லை என, சிலர் கருதுகின்றனர்.தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய சூழல் உள்ளதால், ஜிம், நீச்சல் குளம், விளையாட்டு மைதானங்களுக்கு, செல்ல முடியவில்லை. இதனால், சைக்கிள் ஓட்டுவது மாற்று உடற்பயிற்சியாக இருப்பதும், விற்பனை அதிகரிக்க ஒரு காரணமாக உள்ளது.


latest tamil newsகடந்த மாதம், 25-30 சதவீத அளவு விற்பனை அதிகரித்துள்ளது.சைக்கிளுக்கான உதிரிபாகங்களை தருவிப்பதில் சிரமம் உள்ளதால், உற்பத்தி குறைந்து வருகிறது. வேலைக்கு ஆட்கள் இல்லாதது, கனரக வாகனங்களுக்கான தடை போன்ற காரணங்களால், சைக்கிள் உற்பத்தி குறைந்துள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
'சைக்கிளிங் சிறந்த உடற்பயிற்சி'கோவை 'அதலெட்டிக் கிளப்' துணை தலைவர் ரமேஷ் கூறுகையில், ''கடந்த ஒரு மாதமாக சைக்கிள் கிளப்புகளில், இணையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சைக்கிள் ஓட்டுவது உடற்பயிற்சி என்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் உகந்தது என்பது குறித்த விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளததே காரணம்,'' என்றார்.


Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
13-ஜூலை-202012:15:29 IST Report Abuse
தமிழ்வேள் //அரசு பள்ளியில் 50000 சம்பளம் வாங்கும் ஆசிரியர் சொல்லாததையா 7500 வாங்கும் ஆசிரியர் சொல்ல போகிறார்//- உங்கள் கருத்துக்களில் இது மட்டும் உடன்பாடில்லை நண்பரே ...அரசு பள்ளி ஆசிரியரை விட தனியார் பள்ளி ஆசிரியருக்கு அர்ப்பணிப்பு உணர்வு கல்விதொடர்பான தேடுதல் அதிகம் ..ஆனால் அரசு பள்ளி ஆசிரியருக்கு யூனியன், கட்சிப்பணி,அமைச்சர் பின்னால் சுற்றுதல், சாதி சங்கம் வீடு மனை புரோக்கர் வேலை சொத்துவாங்குதல் டுடோரியல் கல்லூரி நடத்துதல் போன்றவற்றில் ஆர்வம் அதிகம் ..காரணம் வேலை பாதுகாப்பு பென்சன் சாதிசங்க ஈடுபாடு போன்ற புறக்காரணிகள் ...இது உள்ளவரை அரசு பள்ளி உருப்படாது
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
13-ஜூலை-202011:08:39 IST Report Abuse
Vivekanandan Mahalingam விலை குறைவு என்று சீனாவிலிருந்து புண்ணாக்கு கூட இறக்குமதி செய்யும் அளவுக்கு இந்திய தயாரிப்பாளர்கள் கேவலமாக இருக்கிறார்கள் . பட்டன் இல்லாமல் திருப்பூர் அவதி . சைக்கிள் உதிர் பாகங்கள் இல்லாமல் சைக்கிள் தயாரிப்பாளர்கள் அவதி . இவனுங்கள நம்பி இருக்கிற மக்கள் எல்லாவற்றாலும் அவதி
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஜூலை-202010:54:44 IST Report Abuse
Bhaskaran விபத்துகளும் அதிகமாக வாய்ப்பும் உண்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X