காங்., தலைவர்கள் மோடிக்கு நன்றி

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement

புதுடில்லி: காங்., முன்னாள் தலைவர் ராகுல், காலை, மதியம், இரவு என, மூன்று வேளையும், பிரதமர் மோடிக்கு எதிராக ஏதாவது சொல்லி, விமர்சித்துக் கொண்டிருக்கிறார். இது போதாதென்று, காங்., செய்தி தொடர்பாளர்களும், பிரதமரை தினமும் வசைபாடி வருகின்றனர். ஆனால், காங்., தலைவர்கள் சிலர், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இது, கட்சிக்குள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



latest tamil news



கேரளாவில், 30 கிலோ தங்கக் கடத்தல் விவகாரத்தில் தொடர்புள்ள ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கும், முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் பணியாற்றிய சீனியர் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருந்ததால், அந்த அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரலில் கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் காங்கிரசுக்கு அல்வா கிடைத்த மாதிரி ஆகிவிட்டது.

'தங்கக் கடத்தலில் வெளிநாட்டு தொடர்பும், முதல்வர் அலுவலகமும் சம்பந்தப்பட்டுள்ளது; எனவே, மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், ரமேஷ் சென்னிதலா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.இதற்காகவே காத்திருந்த பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், 'தேசிய புலனாய்வு அமைப்பு, இந்த கடத்தல் விவகாரத்தை விசாரிக்கும்' என உத்தரவிட்டனர். இது, கேரள காங்., தலைவர்களை குஷிப்படுத்திவிட்டது. உடனே அவர்கள், மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


latest tamil news



ஆனால், இந்த விஷயத்தில், காங்., முன்னாள் தலைவர் ராகுல், வாய் மூடி மவுனமாக உள்ளார். காரணம், மா.கம்யூ., தலைவர் சீத்தாராம் யெச்சூரியும், இவரும் நண்பர்கள். ஆனால், கேரள காங்., தலைவர்களோ, 'டில்லியை பற்றி எங்களுக்கு கவலையில்லை; இங்கு, இடதுசாரி ஆட்சியை ஒழிக்க வேண்டும்' என்கின்றனர்.

கடந்த சட்டசபை தேர்தலின் போது, 'சோலார் பேனல்' மோசடியில் சம்பந்தப்பட்ட சரிதா நாயர் விவகாரம் பெரிதாகி, அப்போதைய காங்., முதல்வர் உம்மன் சாண்டிக்கு வேட்டு வைக்க, காங்., ஆட்சியை இழந்தது. இப்போது, பினராயி விஜயன் அரசை, ஸ்வப்னா விவகாரம் சுழற்றியடிக்கிறது. பினராயி விஜயனும், ஸ்வப்னாவும் இடம்பெறும் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொண்டிருக்கின்றன. கேரளாவில் இப்படி ஆட்சி மாற, பெண்கள் காரணமாக உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
17-ஜூலை-202001:35:10 IST Report Abuse
Aarkay அந்தக்குடும்ப வலையிலிருந்து கட்சியை மீட்டெடுங்கள் புண்ணியமாய் போகும்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-ஜூலை-202004:14:13 IST Report Abuse
J.V. Iyer பாஜக எப்போதும் உண்மையின் பக்கம்.
Rate this:
Cancel
N S - Nellai,இந்தியா
13-ஜூலை-202015:48:27 IST Report Abuse
N S வயநாட் எம் பி வாயை திறக்கவில்லையே? கேரளத்தில் அவருக்கு அக்கறை இல்லை போலும். ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X