பொது செய்தி

இந்தியா

முதல் முறையாக வெளிநாட்டிற்கு பார்சல் ரயில் அனுப்பிய இந்தியா!

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

அமராவதிநகர்: ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாலமில் இருந்து காய்ந்த மிளகாயை பங்களாதேஷின் பெனபோலுக்கு சிறப்பு பார்சல் ரயில் இந்தியா அனுப்பி வைத்தது



latest tamil news



கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நாடு முழுவது பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய பொதுப் போக்குவரத்தான பயணிகள் ரயில்கள் இயங்கவில்லை. அதனால் ரயில்வே ஆனது மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், உணவு பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் இதர சரக்குகளை பார்சல் ரயில்கள் மூலம் விரைவாக இயக்கி வருகிறது. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் 4,304 பார்சல் சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கியுள்ளது.


latest tamil news



அந்த வகையில் குண்டூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி விவசாயிகளும் வணிகர்களும் பங்களாதேஷுக்கு சாலை வழியாக கொண்டு செல்ல வேண்டிய காய்ந்த மிளாகையை, ரயில்வே ஆனது சிறப்பு பார்சல் ரயில் மூலம் முதல் முறையாக எல்லை தாண்டி கொண்டு சேர்த்துள்ளது. 16 பார்சல் வேன்களில் 384 டன் உலர்ந்த மிளகாயை அனுப்பியுள்ளனர். சிறப்பு ரயிலில் செல்வதற்கு ஒரு டன்னுக்கு ரூ.4,608 செலவாகும், இதையே சாலை மார்க்கமாக கொண்டு சேர்க்க டன்னுக்கு ரூ.7 ஆயிரம் ஆகும்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
16-ஜூலை-202013:02:28 IST Report Abuse
இந்தியன் kumar அணைத்து விவசாய பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர் , உழவர் சந்தை மீண்டும் கொண்டு வர பட வேண்டும்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
13-ஜூலை-202010:29:19 IST Report Abuse
தமிழ்வேள் அனைத்து முக்கிய தடங்களிலும் பார்சல் பாசஞ்சர் சர்வீஸ்கள் மீண்டும் தேவை.... இந்திய ரயில்வேக்கு யார் எடுத்து கூறுவது?
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
13-ஜூலை-202010:27:34 IST Report Abuse
தமிழ்வேள் சிறிய ஊர்களின் வியாபாரிகள் ,பொதுமக்கள் பார்சல் அனுப்புவதற்கு வசதியாகvum, அதே நேரத்தில் பொதுமக்களின் குறைந்த கட்டண பயணத்துக்கும் எதுவாக பார்சல் பாசஞ்சர் ரயில்கள் அதிகம் இயக்கப்பட்டன முன்பு . அனைத்து ரயில் நிலையங்களிலும் பார்சல் புக்கிங் வசதி ஒன்று அல்லது இரண்டு வேகன் கல் நிறுத்த வசதியாக சிறிய யார்டுகள் , சிறிய அளவிலான குடோன்கள் அமைக்கப்பட்டிருந்தன ..அவற்றை யார் நீக்க சொன்னது ? அவை இருந்திருந்தால் இன்றைய சூழலுக்கு எத்துணை உதவிகரமாக இருந்திருக்கும் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X