பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு பாக்கெட் மணி பெற்றுத் தந்த பாக்.,

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முயற்சியால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தடைக் குழு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் வங்கிக் கணக்கை திரும்ப ஒப்படைத்துள்ளது. இதன் மூலம் அவர் தனது அடிப்படை செலவுகளுக்கு வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம்.



latest tamil news


ஜெய்ஷ்-இ-முகமது என அறியப்படும் ஜமா-அத்-தாவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவராக 70 வயதாகும் ஹபீஸ் சயீது உள்ளார். மும்பை தொடர் குண்டு வெடிப்பு மற்றும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய இவரை இந்தியா தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. ஐ.நாவும் இவரை பயங்கரவாதி என கூறியுள்ளது. அமெரிக்கா ஹபீஸின் தலைக்கு 10 மில்லியன் டாலர்கள் அறிவித்துள்ளது. தற்போது அவர் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கிய வழக்கில் தண்டனை பெற்று லாகூர் மத்திய சிறையில் உள்ளார். இதனால் ஹபீஸ் சயீத்தின் வங்கிக் கணக்குகளை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் முடக்கி வைத்திருந்தது.

இந்த நிலையில் ஹபீஸ் தனது குடும்பத்தினரின் அடிப்படை செலவுகளுக்காக அவரது வங்கிக் கணக்கில் இருந்து 'பாக்கெட் மணி' பெற அனுமதிக்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு பயங்கரவாதிகள் சார்பாக இம்ரான் அரசு கடந்த ஆண்டு அக்டோபரில் கோரிக்கை வைத்திருந்தது.


latest tamil news


அதனை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஏற்றதால் ஹபீஸ் சயீது, அப்துல் சலாம் பூட்டாவி, ஹாஜி எம் அஷ்ரப், யஹ்யா முஜாஹித் மற்றும் ஜாபர் இக்பால் ஆகியோர் தங்கள் வங்கிக் கணக்குகளை மீட்டெடுத்துள்ளனர். பாகிஸ்தானின் இந்த செயல்பாடு அதன் போலித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக இந்தியா கருத்து தெரிவித்துள்ளது

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
13-ஜூலை-202015:31:48 IST Report Abuse
Anand ஐ.நா வேஸ்ட், தற்சமயம் இதனால் எதை உபயோகமும் இல்லை. கலைத்துவிடவேண்டும்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
13-ஜூலை-202015:18:52 IST Report Abuse
Anand இந்த ஐ.நா சபை ஒரு கேடுகெட்ட சபையாகி வெகுநாட்கள் ஆகிவிட்டது. சீனா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஒத்தூதும் இதை கலைத்துவிடவேண்டும்.
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
13-ஜூலை-202009:20:58 IST Report Abuse
Balasubramanian Ramanathan தமிழன் நீதி கிடைத்துவிட்டது என அன்பாக தலபுராணம் பாடுவான். சவூதி ராஜா தாளம் போடுவார். இப்படி செய்யலேனா முட்டிப்பான் வெட்டிப்பான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X