காங்.கில் திறமைக்கு மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
politics, congress, Jyotiraditya Scindia, Sachin Pilot,
காங்.கில், திறமைக்கு, மதிப்பும், இல்லை, மரியாதையும், இல்லை

புதுடெல்லி: காங். கட்சியில் திறமைக்கு மதிப்பும் இல்லை , மரியாதையும் இல்லை என சச்சின் பைலட் விவகாரம் குறித்து ஜோதிராதித்யா சிந்தியா கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள காங்., துணை முதல்வர் சச்சின் பைலட், தன் ஆதரவு, எம்.எல்,ஏ.,க்களுடன், பா.ஜ.வில் இன்று இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சச்சின் பைலட் கட்சியில் ஓரங்கட்டப்பட்டு உள்ளதாக காங்கிரசின் முன்னணி தலைவராக இருந்தவரும், சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்தவருமான ஜோதிராதித்யா சிந்தியா கூறியுள்ளார்.


latest tamil news




இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறியது, ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்டால் ஓரங்கட்டப்பட்டார். என்னைப்போல எனது நண்பர் துன்பப்படுவதை பார்க்க வருத்தமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியில் திறமைக்கு மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை. என்பதையே இது காட்டுகிறது. இவ்வாறு அவர் பதிவேற்றியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரசை விட்டு விலகிய ஜோதிராதித்யா சிந்தியா, பா.ஜ.க.வில் அடைக்கலமானார். அவருடன் 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கட்சி தாவியதால் கமல்நாத் அரசு கவிழ்ந்து பா.ஜ.க. அரசு ஆட்சியமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-ஜூலை-202012:38:38 IST Report Abuse
Malick Raja அரசியலில் இத்தெளலாம் சகஜமப்பா ..
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
13-ஜூலை-202022:58:44 IST Report Abuse
m.viswanathan இப்பொது காங்கிரஸ் ஆளும் கட்சியாக இல்லாததால் சம்பாதிக்க முடிய வில்லை , தவிரவும் வருமான வரிக்கு பதில் சொல்ல முடியவில்லை , இடம் மாறினால் நல்லவன்
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
13-ஜூலை-202017:40:37 IST Report Abuse
Rajas அங்கே திறமைக்கு மதிப்பு இல்லை. இங்கே திறமையே தேவையில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X