திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் நிர்வாக வழக்கில் இன்று தீர்ப்பு

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
SC to deliver verdict on 9-year long Padmanabha Swamy temple management case today

புதுடில்லி: திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் பராமரிப்பில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் சொத்துக்கள், நிர்வாகம் தொடர்பான வழக்கில் இன்று ( ஜூலை 13) உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகிறது.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்திப் பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ள ரகசியஅறைகளில் தங்கம், வைரம், வெள்ளி பொருட்கள் அடங்கிய பொக்கிஷங்கள் வெளி உலகுக்கு தெரிய வந்தது.இக்கோயிலை, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.


latest tamil news




"திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் பராமரிப்பில் உள்ள சொத்துக்கள், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாததால், சொத்துக்களை அரசு நிர்வகிக்க வேண்டும். கோவிலின் ரகசிய அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும்' என, சுந்தரராஜன் என்பவர், கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட், கோவிலை அரசு நிர்வகிக்க வேண்டும் என 2011-ல் தீர்ப்பளித்தது.

தீர்ப்பை எதிர்த்து, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கேரள ஐகோர்ட் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதேநேரம், கோவிலில் உள்ள ரகசிய அறைகளைத் திறக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்தாண்டு ஏப்ரலில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்தன. தீர்ப்பு தேதி வெளியிடப்படவில்லை. இந்நிலையில் 9 ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது..

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மனிதன் - மதுரை,இந்தியா
13-ஜூலை-202011:07:38 IST Report Abuse
மனிதன் பத்மநாபசுவாமிகள் சொத்து முழுவதும் தமிழர் சொத்து. அதை ஆவணப்படுத்தி இருந்த அறைதான் கடைசி அறை. அதைத் திறந்தால் சொத்து எந்த எந்த அரசர்கள் எந்தக்காலத்தில் கொடுத்தது என்பது தெரிய வந்திருக்கும். இத்தனை வருட காலத்தில் எல்லாவற்றையும் அழித்திருப்பார்கள் மலையாள நம்பூதிரிகள்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஜூலை-202007:53:33 IST Report Abuse
Lion Drsekar ஏதோ ஒரு அறை திறக்க முடியவில்லை என்றும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன, அந்த நேரத்தில் நான் அதே கோவில் சென்றபோது அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் அதுபோன்று இந்த கோவிலில் எதுவுமே நடக்கவில்லை என்று கூறினார்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X