மாஸ்கோ: கொரோனா தடுப்பூசி மருந்தினை மனிதர்களுக்கு வெற்றிகரமாக பரிசோதித்துவிட்டதாக ரஷ்ய பல்கலை. தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் இதுவரை கொரோனாவுக்கு 7,27,162 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11,335 ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்தது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்தின் உருவாக்க ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ரஷ்யாவின் கேம்லே தொற்றுநோய் மற்றும் நுண்உயிரியல் ஆராய்ச்சி மையம் கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்தினை கண்டறிந்துள்ளது.
இது குறித்து அந்த ஆய்வு மையத்தின் இயக்குனர் வேடிம் தெரசவ் கூறியதவது: கடந்த ஜூன் 18ம் தேதியன்று ரஷ்யாவின் செசனோவ் மருத்துவ பல்கலை.யில் கொரோனா பாதித்த சிலருக்கு சோதிக்கப்பட்டது. சோதனை வெற்றிகரமாக அமைந்தது. நாங்கள் உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் உலகில் முதன்முறையாக கொரோனா தடுப்பூசி மருந்து மனிதர்களுக்கு பரிசோதனை செய்த நாடு என்ற பெருமை பெற்றுள்ளது. இரண்டாம் கட்டமாக வரும் ஜூலை 20ல் பரிசோதிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE