பொது செய்தி

இந்தியா

'டிக் டாக்' தடை எதிரொலி; புது செயலி உருவாக்க பயிற்சி

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: பள்ளி மாணவர்கள், புதுமையான செயலிகளை உருவாக்குவதற்கான புதிய திட்டத்தை, மத்திய அரசு, துவங்கியுள்ளது.சீனாவின், 'டிக் டாக்' உட்பட, 59 செயலிகளை, சமீபத்தில், மத்திய அரசு தடை செய்தது. இதையடுத்து, நம் நாட்டினர், புதுமையான செயலிகளை உருவாக்க, ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கானோர், இந்திய செயலிகளைப் பதிவிறக்கம் செய்யத் துவங்கியுள்ளனர். மத்திய அரசு
Tiktok, tiktok Ban, App, Made In India, NITI Aayog, டிக்டாக், தடை, செயலிகள், ஆப்கள், பயிற்சி

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: பள்ளி மாணவர்கள், புதுமையான செயலிகளை உருவாக்குவதற்கான புதிய திட்டத்தை, மத்திய அரசு, துவங்கியுள்ளது.

சீனாவின், 'டிக் டாக்' உட்பட, 59 செயலிகளை, சமீபத்தில், மத்திய அரசு தடை செய்தது. இதையடுத்து, நம் நாட்டினர், புதுமையான செயலிகளை உருவாக்க, ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கானோர், இந்திய செயலிகளைப் பதிவிறக்கம் செய்யத் துவங்கியுள்ளனர். மத்திய அரசு அதிகாரிகள் சிலர் கூறியதாவது: 'தற்சார்பு இந்தியா' முன் முயற்சியின் ஒரு பகுதியாக, 'நிடி ஆயோக்' கின், அடல் புத்தாக்கத் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு செயலி மேம்பாட்டுப் பாடத் திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன.


latest tamil news


மொபைல் செயலி, 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தின் துணையுடன் துவங்கப்பட்ட இத்திட்டத்தில், அனைத்து மாணவர்களுக்கும், 'ஆன்லைன் கோர்ஸ்' இலவசமாக நடத்தப்படும். இவற்றில், மாணவர்கள், செயலிகளை உருவாக்கும் வகையில், ஆறு திட்டங்கள் இடம்பெறுகின்றன. இது தொடர்பாக, ஆசிரியர்களுக்கும் ஆன்லைன் பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
13-ஜூலை-202011:53:59 IST Report Abuse
mathimandhiri இந்த விஷயத்தில் முடிவு எடுத்தது எடுத்தது தான் என்று மத்திய அரசு பின் வாங்காமல் செயல் பட வேண்டும். நம் இளைஞர்கள் டிக் டாக்கில் தங்களைக் கட்டிப் போட்டு அதன் போக்கில் நேரம், சிந்திக்கும் திறன், சமூகக் கடமை இவற்றை அறவே அழித்து வாழ்நாளை வீண் நாட்களாக ஆக்கிக் கொண்டதைத் தவிர வெறெந்தப் பயணம் விளைய வில்லை. இது ஒரு கையடக்கமான, சாதனத்தில் நினைத்தால் பருக முடியற இனிப்பு விஷம். இளைஞர்கள் சத்தியை விரயம் செய்வதால் இது நாட்டுக்கு மிகப் பெரிய இழப்பை எதிர்காலத்தில் உண்டாக்கி நம் நாட்டின் தூண்களாக இருக்க வேண்டிய இளைஞர்களை துறு பிடித்து உளுத்த கம்பிகளாக அதுவும் நம் செலவிலேயே ஆக்கி விடும் ராட்சதர்கள் தான் இந்த சீன செயலிகள்.. நாட்டின் செல்வங்கள் வேண்டாத பயன் படாத வீண் சுமையாக மாற விடக்கூடாது.
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
13-ஜூலை-202009:05:57 IST Report Abuse
R Ravikumar சிறிது நாட்களுக்கு முன்பு கேள்வி பட்டது டிக் டொக் இந்தியாவில் 45000 கோடி வியாபாரம் மாம் . ஆகவே அது இல்லை என்றாலும் கூட மற்றவர்கள் முயற்சி செய்வது இயல்பு தான் . 41% சதவீத இளைஞர்கள் 16 to 24 வயது மக்கள் தனது நேரத்தை போக்குவது இதில்தான் . நேரம் தின்பது தான் இதன் வியாபாரம் . என் கவலை என்ன வென்றால் நம் இளைஞர்கள் 16 to 24 வயதை டிக் டொக் மற்றும் pubg யில் நேரத்தை வீணடித்து விட்டு பிறகு கம்யூனிசம் படிக்காதீர்கள் .. அது உங்களுக்கும் , நாட்டுக்கும் கேடு . இயற்கையின் உணவு உங்கள் முன்னால் வைக்கப்பட்டு , உங்கள் சகோதரனின் பசி , தோழனின் பசி உங்களால் மனிதாபிமான முறையில் பகிர்ந்து அளிக்கப்பட்டால் மட்டுமே கம்யூனிசம் நல்லது . அதாவது நீங்கள் பலமானவராக இருக்கும் பொது மட்டுமே . அந்த இயற்கையின் உணவு இல்லை என்ற நிலையில் அதை நாம் தான் உருவாக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் .. சுய தொழில் மட்டுமே நம்மை காக்கும் . சுய தொழிலுக்கு இந்த கம்யூனிசம் எதிரி ..வரலாறு அதை தான் சொல்கிறது . ஆகவே காலையில் டிக் டொக் வீடியோ போட்டு , மதியம் pubg விளையாடி மாலையில் அரசாங்க மது அருந்தி விட்டு , இரவில் கம்யூனிசம் படிக்காதீர்கள் .. அது உங்களை அழித்து நாட்டையும் அழிக்கும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X