பொது செய்தி

இந்தியா

கல்வி சான்றிதழும் போலி? கடத்தல் ராணி ஸ்வப்னா பலே விளையாட்டு

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (70)
Share
Advertisement
Swapna suresh, Fake Certificate, Gold Smuggling, kerala news, kerala smuggling, ஸ்வப்னா, போலி, சான்றிதழ்

திருவனந்தபுரம்: தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, போலி கல்வி சான்றிதழை பயன்படுத்தி பணியில் சேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில், சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 30 கிலோ தங்கம் சிக்கியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக அலுவலகத்தில், மக்கள் தொடர்பு துறையில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் சரித், நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா ஆகியோர், இந்த கடத்தலின் பின்னணியில் இருப்பது தெரிய வந்தது. சரித் கைது செய்யப்பட்டார்; ஸ்வப்னா தலைமறைவானார். இந்நிலையில் பெங்களூரில் பதுங்கி இருந்த ஸ்வப்னாவை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்து, கொச்சிக்கு அழைத்து வந்தனர்.


latest tamil news


கேரள மாநில தகவல் தொழில்நுட்ப துறையில், ஸ்வப்னா, பணிக்கு சேர்ந்தது எப்படி என்பது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், 'பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ்' என்ற கன்சல்டன்சி நிறுவனத்தின் வாயிலாக, அவர், பணிக்கு சேர்ந்தது தெரியவந்தது. ஸ்வப்னா அளித்த கல்வி சான்றிதழில், மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு பல்கலையில், பி.காம்., படித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பல்கலை அளித்ததாக கூறி, ஒரு சான்றிதழையும் அவர் கொடுத்துள்ளார்.

ஆனால், 'அந்த சான்றிதழில் உள்ள கையெழுத்து, சீல் ஆகியவை போலியானவை. ஸ்வப்னா, எங்கள் பல்கலையில் படிக்கவில்லை' என, அந்த பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து, அந்த கன்சல்டன்சி நிறுவனத்திடம் நடத்திய விசாரணையில், ஸ்வப்னா, அந்த பல்கலையில் படித்தாரா என்பதை உறுதி செய்யும் பணியை, வேறு ஒரு ஏஜென்சியிடம் ஒப்படைத்திருந்ததாகவும், அந்த ஏஜென்சி அளித்த தகவல் அடிப்படையில் தான், ஸ்வப்னாவை பணிக்கு பரிந்துரைத்ததாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-ஜூலை-202016:57:06 IST Report Abuse
skv srinivasankrishnaveni கான் கிரேஸ் லேயே இருக்காங்களே அரைகுறையப்படிச்சு ஏதாச்சும் குப்பை யுனிவரசிட்டிலே எம் பி ல் சர்டிபிகேட் வாங்கி வச்சுண்டு ந்தானெல்லம்படிக்காத எஜூகேஷனிஸ்ட் என்றும் பித்த பெருமைபேசுதுங்களே கண்றாவி லே முதல் ரேங்க் வாங்கினதுகளேதான்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
19-ஜூலை-202009:27:01 IST Report Abuse
Sampath Kumar அடஎங்கப்பா ஸ்ரீனிவாசன் kirshnaveni நீங்க சிபிஐ யில் இருக்க வேண்டியவறு என்னமா கன்டுபிடிக்கிறீங்க அப்படியே அவ புருஷன் அவனும் முஸ்லீம் தான் entru easya கண்டுபிடிக்கலாம்
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
16-ஜூலை-202010:32:47 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி இந்த சொப்பன சுந்தரி தனது படிப்பு சான்றிதல்களை கம்யூனிஸ்ட் தலைமையில் காட்டியிருப்பார் அவர்களுக்கு திருப்தி ஏற்பட்டு பிணவிஜயன் ஆசியுடன் தங்கக் கடத்தல் வேலைக்கு நியமனம் செய்திருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X