பொது செய்தி

இந்தியா

மக்களிடம் பணம் புழங்க என்ன திட்டம் வச்சிருக்கீங்க!

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
மக்கள், பணம், என்ன, திட்டம்

'அது சரி. இப்போது, மக்கள் கையில் பணம் புழங்க, என்ன திட்டத்தை அறிவித்துள்ளது, பா.ஜ., சொல்லுங்கள்...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி:

நம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவால் கொரோனா பாதிப்பில் இருந்து மீள, சுயசார்பு இந்தியா திட்டத்தில், பல லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இதற்கான பலன் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு பின் தான் தெரிய வரும்.

'அரசியல் காரணங்களுக்காக தண்டனை அனுபவித்த பலர், ஆண்டுதோறும் விடுவிக்கப்பட்ட போது, இரு கட்சிகளின் கூட்டணியில் இருந்த நீங்கள், வாய் திறந்ததே இல்லையே...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை:

மேலவளவு படுகொலை ஆயுள் கைதிகளை, சட்ட விரோதமாக தமிழக அரசு விடுவித்துள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்ட கைதிகளை மன்னித்து விடுவிக்கக் கூடாது.

'இதை எல்லாம் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்பதை, நீங்கள் சொல்லும் கட்சித் தலைவர்களும், பிற கட்சியின் தலைவர்களும் மறந்திருக்க மாட்டார்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், சென்னை முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் அறிக்கை:


latest tamil news




அண்ணாதுரையால், 'தம்பி வா, தலைமை ஏற்க வா' என, பாராட்டுப் பெற்ற நெடுஞ்செழியனை, எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ, அந்த அளவிற்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அவமானப்படுத்தியுள்ளார். ஆனால், இன்று, அவரது படத்தை திறந்து, அ.தி.மு.க., அரசை குறை கூறி, அரசியல் செய்கிறார்.

'வீடுகளில் கொரோனா பாடம் எடுக்க அனுப்பியுள்ளனரோ என்னவோ...' என, கிண்டல் செய்யத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மைய தொழிலாளர் அணி மாநில செயலர் பொன்னுசாமி அறிக்கை:

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை, கொரோனா தடுப்பு பணி எனும் பெயரில், அந்நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு செல்ல கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மறுக்கும் ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடப்படுகிறது.

'ஜாதியற்ற சமுதாயத்தை படைக்க, 70 ஆண்டுகளாக பாடுபடுகின்றனர் என்கின்றனர். இன்னமும் முடியவில்லையோ...' என, கேட்கத் துாண்டும் வகையில், புதிய தமிழகம் கட்சி பிரமுகர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை:

உ.பி.,யில் கூட, மாயாவதியால், முதல்வர் ஆக முடிகிறது. தி.மு.க., ராஜாவால், இன்னமும் தனித் தொகுதியை தாண்ட முடியவில்லை. இங்கே, ஜாதியை இறுக்கமாக வைத்திருப்பதில், திராவிட கட்சிகளுக்கு பெரும் பங்குண்டு.

'கேரளாவில், மாணவர்களின் வீடுகளுக்கு மட்டும் தான், இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில், அரிசி ரேஷன் கார்டு வைத்திருந்தாலே, 20 கிலோ இலவசமாக வழங்கப்படுகிறதே...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிக்கை:

எங்கள் கட்சி ஆட்சி நடக்கும் கேரளாவில், எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 26 லட்சம் மாணவர்களுக்கு, இணையதள கல்வி தரப்படுகிறது. அவர்களின் வீடுகளுக்கு, அரிசியும், எட்டு வகை பருப்பும் இலவசமாக தரப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறவோன் - Chennai,இந்தியா
13-ஜூலை-202018:35:26 IST Report Abuse
அறவோன் ஷ்யாம் பிரசாத் திருவோடு யோஜனா இருக்கு
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
13-ஜூலை-202017:23:21 IST Report Abuse
g.s,rajan Vaayila vadai .
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
13-ஜூலை-202015:40:09 IST Report Abuse
Baskar பொன்னரிடம் இந்த கேள்வியை கேட்கலாமா. அவர் என்ன சொல்வார் சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணத்தை எடுத்து கோரோனோ போன பின் ஆளுக்கு ருபாய் பதினைந்து லட்சம் அவரவர் வாங்கி கணக்கில் சேர்க்க படும் என்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X