பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வார்டில் கிருமி நாசினி தெளிக்க தானியங்கி கருவி: மதுரை பொறியாளர் கண்டுபிடிப்பு

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
madurai, madurai news, coronavirus, covid 19, கொரோனா,  கிருமி நாசினி, தானியங்கி கருவி,மதுரை, பொறியாளர்

மதுரை :கொரோனா வார்டில், கிருமிநாசினி தெளிக்கும் தானியங்கி கருவியை, மதுரையை சேர்ந்த பொறியாளர் கண்டுபிடித்துள்ளார்.

மதுரை, அய்யர்பங்களாவைச் சேர்ந்தர் சுந்தரேஸ்வரன், 35; மெக்கானிக்கல் பொறியாளர். மருத்துவ உபகரணம் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார். ஏப்ரலில் சானிடைசர், அலைபேசி, முகக்கவசத்தை நீரில்லாமல் சுத்தப்படுத்தும், 'ரெட் பாக்ஸ்' கருவியை கண்டுபிடித்தார். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதன் ஊக்கத்தால், தற்போது காற்றில் கிருமிகளை அழிக்கும் கருவியையும், அலைபேசி மூலம் இயக்கி கொரோனா வார்டில் கிருமிநாசினி தெளிக்கும் கருவியையும் கண்டுபிடித்துள்ளார்.


latest tamil news



அவர் கூறியதாவது: காற்றில் கிருமிகளை அழிக்கும் கருவி, காற்றை உள்வாங்கி சுத்தப்படுத்தி, ஓசோன் மண்டலமாக மாற்றும். பின், அந்த காற்றை தண்ணீரில் விடும்போது இயல்பு நிலை காற்றாக மாறும். இந்த இடைப்பட்ட நேரத்தில் பெறப்படும் சக்தி, கிருமிகளை அழித்துவிடும். அந்த காற்றை தண்ணீரில் விடும்போது அதில் உள்ள கிருமிகளை கொன்றுவிடும். தண்ணீரின் இயல்பு நிலை மாறாது.இந்த கருவி, கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இந்த கருவியால், வீடு, அலுவலகங்களில், 6 அடி உயரம் வரையும், வெளிப்புற பகுதியில், 12 அடி உயரம் வரையும் கிருமி நாசினி தெளிக்கலாம்.கொரோனா வார்டில் தானாக சென்று தெளிக்கும். அதை அலைபேசி 'ப்ளூ டூத்' மூலம் இயக்கலாம். 2 மணி நேரம் சார்ஜ் செய்தால், 4 மணி நேரம் வரை தெளிக்கலாம். இவ்விரு கருவிகளுக்கும் தரச்சான்றிதழ் பெற்றுள்ளேன். காப்புரிமைக்கும் விண்ணப்பித்துள்ளேன். அதன் பின் விற்பனைக்கு வரும். இவ்வாறு கூறினார்.

இவரை, 93606 20007 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kamal -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜூலை-202015:13:06 IST Report Abuse
kamal ஒன்றுக்கும் உதவாத கண்டுபிடிப்பு... இதை ஒரு கண்டுபிடிப்பாகவே கருத முடியாது..
Rate this:
Cancel
ravikumar - MUSCAT,ஓமன்
13-ஜூலை-202010:43:21 IST Report Abuse
ravikumar இந்த மாதிரியான தமிழரின் கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்க வேண்டும் .
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
13-ஜூலை-202010:17:28 IST Report Abuse
sundarsvpr தனிப்பட்ட நபர்கள் கொலை தற்கொலைகளுக்கு முக்யத்வம் கொடுக்கும் அரசியல் கட்சிகள் இது மாதிரி பரிசோதனை பற்றி மக்களுக்கு விழுப்புணர்ச்சி ஏற்படுத்தலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X