பொது செய்தி

இந்தியா

600 மீட்டர் பின்வாங்கியது சீன படை: ரோந்து பணிகள் ஒத்திவைப்பு

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
india, china, ladakh, india china border row, லடாக், கல்வான், சீன படை, இந்திய ராணுவம்,  ரோந்து பணி, ஒத்திவைப்பு, இந்திய ராணுவம்,

புதுடில்லி: லடாக் பகுதியில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினர், தங்கள் நிலைகளில் இருந்து, 600 மீட்டர் மட்டுமே பின்வாங்கிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.


வீரமரணம்


காஷ்மீர் அருகேயுள்ள லடாக் பகுதியில், இந்திய - சீன எல்லையில், சமீபத்தில் பதற்றம் நிலவியது. சீன ராணுவ வீரர்கள் நடத்திய கொடூர தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நம் வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில், சீன வீரர்கள் சிலர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், சீன ராணுவம், இதை உறுதி செய்ய மறுக்கிறது. இதையடுத்து, எல்லையில் போர் பதற்றம் எழுந்த நிலையில், இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் அமைதி பேச்சு நடத்தினர். மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் பேச்சு நடத்தினார். இதில், பதற்றத்தை தவிர்க்க, இரு தரப்பும், சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து வாபஸ் பெறுவது என, முடிவு செய்யப்பட்டது.


latest tamil news



இதையடுத்து, லடாக் அருகில், சீன வீரர்களும், நம் வீரர்களும், தங்கள் நிலைகளில் இருந்து, 1.5 கி.மீ., பின்வாங்கிச் சென்றதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், இரு தரப்பும், லடாக் பகுதியிலிருந்து, 600 மீட்டர் வரை மட்டுமே பின்வாங்கிச் சென்றதாக, நேற்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.


நடவடிக்கை

எல்லையில், இரு தரப்பு வீரர்களும் மிக அருகருகே நிற்பதால், அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. கல்வான், கோக்ரா உள்ளிட்ட இடங்களில், இரு தரப்பும், தற்காலிகமாக ரோந்து பணிகளை ஒத்தி வைத்துள்ளதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
13-ஜூலை-202020:13:05 IST Report Abuse
K.n. Dhasarathan என்ன நடக்கிறது எல்லையில்? என்ன பேசினாலும் உண்மையை மட்டும் பேசுங்க, தகவல் குளறுபடிகள் பட்டியல் . 1. இந்திய ராணுவத்தில் இருபது நபர் இறந்தார் , ஆனால் சீனா ராணுவத்தில் நாற்பத்திமூன்று பேர் இறந்தார், எப்படி ? 2.இரு ராணுவத்தினரும் 1.5 கிலோமீட்டர் பின் வாங்கினார், இப்போது சீனா 600 மீட்டர் மட்டுமே பின் வாங்கினார், ஏன் ? ஒப்பந்தம் என்ன சொல்கிறது? ஒப்பந்தப்படி நடக்கவில்லையெனில் ஐ நா விற்கு கேட்கும்வரை கூச்சலிடுங்கள் . 3. கடுமையான காயங்களோடு அசுபத்திரியில் கிடப்பவர்கள் எவ்வளவு அங்கெ? மற்றும் இங்கே? 4. உயிரோடு பிடிபட்டவர்கள் எத்தனை பேர் அங்கெ? மற்றும் இங்கே ? 5. இன்னும் விடுபட்ட விபரங்கள் உண்ட? விபரம் என்ன? அஜித் தோவல் இதற்கெல்லாம் பதில் சொல்வாரா அல்லது இவர் குரு M.K. நாராயண் போல எல்லாத்துக்கும் மழுப்புவாரா , குறைந்தது சொல்லக்கூடியது மட்டுமாவது சொல்லலாமே
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
13-ஜூலை-202017:39:39 IST Report Abuse
NicoleThomson என்னவோ அறுநூறு கிமி ஓடிட்டா மாதிரி எழுதறீங்க , ஓடிஏ ஓடிஏ விரட்டுங்க பாசு
Rate this:
Cancel
RS PRAKASH -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜூலை-202017:11:17 IST Report Abuse
RS PRAKASH Neely kaneer
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X