பொது செய்தி

இந்தியா

அழியும் நிலையில் இமயமலை ‛‛வயாக்ரா காளான்'': சிவப்பு பட்டியலில் சேர்ப்பு

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Himalayan Viagra, fungus, dehradun, ஹிமாலயன் வயகரா, ஐயூசிஎன், சிவப்பு பட்டியல்

டேராடூன்: அழியும் நிலையில் இருப்பதால் ‛ஹிமாலயன் வயகரா' என அழைக்கப்படும் உலகின் விலை உயர்ந்த காளானைஇயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியமான ஐ.யூ.சி.என்,, ‛சிவப்பு பட்டியலில்' சேர்த்துள்ளது.


உலகின் விலையுயர்ந்த காளான் வகையை சேர்ந்த ஓபியோகார்டிசெப்ஸ் சினென்சிஸ், ‛ஹிமாலயன் வயகரா' என்றும் அழைக்கப்படுகிறது, இது சர்வதேச சந்தைகளில் ஒரு கிலோ ரூ.20 லட்சம் வரை விற்கப்படுகிறது. கோண் வடிவத்தில் கம்பளிப்பூச்சி போன்ற தோற்றத்தில் காணப்படும் இந்த ‛ஹிமாலயன் வயகரா' காளான், இந்தியா, சீனா, பூடான், நேபாளம் நாடுகளில் காணப்படுகிறது. குறிப்பாக இமயமலை மற்றும் திபெத்திய பீடபூமியில் காணப்படுகிறது.


latest tamil news


இந்தக் காளானை மருத்துவ குணத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்துமா, கேன்சர், ஆண்மையின்மை போன்ற பல நோய்களையும் குணப்படுத்தக்கூடியது என்பதால், மருத்துவச் சந்தையில் இதன் மதிப்பு மிகவும் அதிகம். இந்நிலையில், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தில் (ஐ.யூ.சி.என்) இந்த காளான், அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.


latest tamil news


கடந்த ஜூலை 9ம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலில், 'அழியக்கப்படக்கூடிய' பிரிவில் இந்த ‛ஹிமாலயன் வயகரா' சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் அதிக அளவு அறுவடை செய்ததன் விளைவாக அதன் உற்பத்தில் 30 சதவீதம் குறைந்துள்ளதாக ஐயூசிஎன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐ.யூ.சி.என்.,-ன் இந்திய பிரதிநிதி விவேக் சக்சேனா கூறுகையில், இந்த காளான், சிவப்பு பட்டியலில், பாதிக்கப்படக்கூடிய பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டதற்கான நோக்கம், அதை பாதுகாப்பதற்காக முறையான அரசாங்க கொள்கைகளை செயல்படுத்துவதை உறுதி செய்வதே ஆகும்,' எனக் கூறினார்.


latest tamil news


சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதால் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் பாதிக்கப்படுவர். அவர்கள் இந்த காளான் சேகரிப்பையை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். உத்தரகண்டில் கீடா ஜாடி என அழைக்கப்படும் இந்த காளான், இந்தியாவில் ஒரு கிலோ சுமார் 10 லட்சம் ரூபாய்க்கும், சீனா மற்றும் சர்வதேச சந்தைகளில் ரூ.20 லட்சம் வரையிலும் விற்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
16-ஜூலை-202012:58:15 IST Report Abuse
இந்தியன் kumar கொட்டி கிடக்கிறது வளம் இந்தியாவில் முறையாக பயன்படுத்தினால் நாம் தான் முதன்மையான நாடு.
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
13-ஜூலை-202017:32:10 IST Report Abuse
ponssasi இதை விவசாய பெருமக்களிடம் கொடுத்து விளைவிக்க செய்யலாம் கொள்முதலை அரசே ஏற்கவேண்டும், விவசாயிக்கும் நல்ல லாபம், அரசுக்கு நல்ல வருவாய் கிட்டும், மருத்துவம் மற்றும் இதர பயன்பாட்டுக்கும் அனைவர்க்கும் கிடைக்கும்
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
13-ஜூலை-202017:02:14 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு போட்டோவைப் பார்த்தாலே புரியுது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X