பொது செய்தி

இந்தியா

கொரோனா சிகிச்சை: பட்டியலில் இருந்து 23 மருத்துவமனைகள் நீக்கம்

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
coronavirus, covid 19, tamil nadu, coronavirus treatment, கொரோனா சிகிச்சை, தனியார் மருத்துவமனை, பட்டியல், இணையதளம், ராதாகிருஷ்ணன்,

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இருந்து 23 தனியார் மருத்துவமனைகள் நீக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவில்லை என எழுந்த புகாரை தொடர்ந்து அந்த மருத்துவமனைகள் நீக்கப்பட்டுள்ளன. சென்னையிலும் ஒரு மருத்துவமனை, பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தமிழகம் முழுவதும் 230 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அது குறித்த பட்டியல் அரசின் இணையதளங்களில் வெளியிடப்பட்டது. அதில் எத்தனை ஐசியு படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள், பொதுவார்டு படுக்கைகள் உள்ளன என்ற விவரங்கள் இடம்பெற்றிருந்தன. இதனை பார்த்து, நோயாளிகள் அங்கு சென்றால், அவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை என புகார்கள் வந்தன. இதனையடுத்து, தேனி, கரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, ஒசூர், தர்மபுரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், கடலூர், தஞ்சாவூர், சேலம், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த மருத்துவமனைகள், அரசின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகி ஒருவர் கூறுகையில், சுகாதார மற்றும் மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்த போது, பல பிரச்னைகளை கண்டறிந்தனர். எங்கள் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையில் 100 பேர் உள்ளனர். அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. இதனால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை என அரசிடம் தெரிவித்தோம். இதனால், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் அஜய் யாதவ் கூறுகையில், அனைத்து தனியார் மருத்துவமனைகளும், அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். பின்வாங்குவதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனையை தேடி, நோயாளிகள் அலையக்கூடாது என்பதற்காக அரசின் இணையதளம் தினமும் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsஇது தொடர்பாக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. பல மருத்துவமனைகளில் தனி நுழைவு மற்றும் வெளியேறும் பாதை இல்லை. நோயாளிகளை தனிமைபடுத்தும் வசதி இல்லை. மேலும் போதுமான ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களும் இல்லை. குறைந்தளவு டாக்டர்களே உள்ளதால், அந்த மருத்துவமனைகள், கொரோனா அல்லாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு 39 மருத்துவமனைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அந்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. தனியார் மருத்துவமனைகள் குறித்து ஆய்வு செய்தோம். அதில், சிகிச்சை விருப்பம் தெரிவித்த மருத்துவமனைகளை வைத்து பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்க சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். .இவ்வாறு அவர் கூறினார்.

அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இருந்து 39 மருத்துவமனைகள் நீக்கப்பட்டுள்ளன. என ராதாகிருஷ்ணன் கூறினாலும், 23 மருத்துவமனைகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது, இணையதளம் மூலம் தெரியவந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
13-ஜூலை-202018:35:45 IST Report Abuse
S. Narayanan எல்லா மருத்துவ மலைகளிலும் அவலம் நீடிக்கிறது.
Rate this:
Cancel
13-ஜூலை-202016:09:18 IST Report Abuse
ஆனந்தன் பட்டியல்கள் முதலில் தயாரிக்கும் போது இது எல்லாம் அரசாங்கம் ஆய்வு செய்யவில்லையா..? அப்புறம் எந்த அடிப்படையில் அந்த மருத்துவமனையை பட்டியலில் இனைத்தார்கள்..?
Rate this:
Cancel
Ramona - london,யுனைடெட் கிங்டம்
13-ஜூலை-202013:42:22 IST Report Abuse
Ramona அந்த மருத்துவமனைகள் இதற்குள் தங்களுக்கு தேர்தலில் வேண்டிய பணத்தை இன்ஷரன்ஸ, மற்றும் நோயாளிகள் வீடு, நிலம் ஆகியவை விற்று கிடைக்கும் பணத்தை சுருட்டி இருக்கும், எடுக்கும் முடிவுகளுக்கு சரியான நேரத்தில் அரசாங்கம் எடுக்க வேண்டும், இல்லையா இப்படி தான் மக்கள் ஏமாந்து போக நேரிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X