அமெரிக்காவில் 'கொரோனா பார்ட்டி': பங்கேற்ற இளைஞர் பலி

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்காவில், 'கொரோனா பார்ட்டி'யில் பங்கேற்ற அமெரிக்க இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவால் அதிக பாதிப்புகளைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை, 33.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1.35 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவின் அச்சுறுத்தல் ஒருபுறம் என்றால், 'மாஸ்க் அணிவதால் பயனில்லை; கொரோனா என்றொரு வைரசே இல்லை; எல்லாம் வதந்தி' என, அமெரிக்காவில் ஒரு சாரார் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் தற்போது, அமெரிக்காவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில், 'கொரோனா பார்ட்டி' நடத்தும் அபாயகரமான பழக்கம் திடீரென தொற்றி வருகிறது. கொரோனா பார்ட்டியில் பங்கேற்றதால் முதலில் தொற்று ஏற்படுபவருக்கு, பரிசு என்ற விபரீத அறிவிப்பும் வெளியிடுகின்றனர்.



latest tamil news




இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்டு தொற்றுக்கு ஆளாகி உயிரையும் பறிகொடுத்துள்ளார்.டெக்சாஸ் மாகாண சான் ஆன்டோனியோ பகுதியில் உள்ள மெத்தடிஸ்ட் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ஜேன் ஆப்பிள்பை கூறுகையில், '30 வயதாகும் அந்த இளைஞர் கொரோனா வைரஸ் என்பதே வதந்தி எனத் தீவிரமாக நம்பியுள்ளார். அதனால் அவர், கொரோனா பார்ட்டியில் பங்கேற்றுள்ளார். கொரோனா பாதித்தவர்களும் அந்தப் பார்ட்டியில் பங்கேற்றதால் அவரும் தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இளைஞர்கள் கொரோனா தொற்றை அசட்டை செய்யக்கூடாது' எனத் தெரிவித்தார்.


latest tamil news




தொற்று ஏற்பட்ட பின் அந்த இளைஞர், 'நான் தவறு செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்' என, வீடியோ மூலம் வாக்குமூலம் அளித்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவைப் பார்த்தவர்கள், அந்த 'இளைஞரின் உருக்கமான வார்த்தைகள் கொரோனா பார்ட்டிக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பாடமாக அமையட்டும்' என, கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-ஜூலை-202017:47:21 IST Report Abuse
J.V. Iyer மிளகு ரசம் சாப்பிட்டால் கரோனா வராது என்று நம்பும் அறிவீலிகள் நம்மிடையே உள்ளனர்.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
13-ஜூலை-202015:34:57 IST Report Abuse
vnatarajan உலகில் டிக் டாக் போன்ற செயலிகளை தடுத்திடவேண்டும். ஏனென்றால் இப்படிப்பட்ட செயலிகள்தான் தற்கால இளைஞராய் அழிவுப்பாதைக்கு செல்ல செய்கிறது
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
13-ஜூலை-202015:34:14 IST Report Abuse
Raj நம்ம முதல்வர் கூட வயதானவர்களுக்கு தான் கொரோனா வருமென்று முதலில் கூறினார் அப்புறம் மூன்று நாளில் போய்விடும் என்றார். என்ன செய்ய நம்ம தமிழ் நாட்டு முதல்வரை. இந்தியாவில் தற்போது நாம் இரண்டாம் இடம். உலகத்திலும் இந்தியா இரண்டாம் இடம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X