பொது செய்தி

தமிழ்நாடு

துடியலூரில் மேலும் இரு போலீசாருக்கு கொரோனா; பாதிப்பு 7 ஆக உயர்வு

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

கோவை: கோவை துடியலூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த, மேலும் இரு போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



latest tamil news




கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலையத்தை சேர்ந்த, 31 போலீசாருக்கு, கடந்த ஐந்து நாட்களுக்கு முன், கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஒரு பெண் போலீஸ் உட்பட, ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிப்புக்கு உள்ளான ஐந்து பேரும் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காவல் நிலையம் மூடப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.


latest tamil news



இந்நிலையில், துடியலூர் காவல்நிலையத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில், 24, 22 வயதுடைய இரு போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், துடியலூர் காவல் நிலையத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான போலீசாரின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. போலீசாரின் குடும்பத்தினருக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
13-ஜூலை-202015:23:21 IST Report Abuse
Visu Iyer இப்படி பரவுது என்று தெரிந்தே லாக் டவுன் தளர்வு தேவையா...
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
13-ஜூலை-202015:22:43 IST Report Abuse
Visu Iyer காவல் நிலையம் மூட பட்டால்.... கம்பளைண்ட் எங்கே கொடுப்பது.. மத்திய அரசின் பாதுகாப்பில் இருந்த முன்னாள் முதல்வர் அம்மா வுக்கே பாதுகாப்பு என்ற நிலையில் கேள்விகள் வரும் போது காவலர்களுக்கு.....
Rate this:
Cancel
மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயம் இந்த அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை ஆக எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X