தொடர்ந்து முட்டிக்கொள்ளும் டிரம்ப்-ஆண்டணி பவுஸி; விவரம் என்ன?

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகை நோய்தொற்று தடுப்பு நிபுணர் மற்றும் அரசு ஆலோசகர் ஆண்டனி பவுஸி. இவர் கொரோனாவுக்கு அமெரிக்காவில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என முன்னதாக தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு நேர் எதிராக குடியரசுக் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து
White House, Anthony Fauci, Trump, CoronaVirus, டிரம்ப், பவுஸி

வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகை நோய்தொற்று தடுப்பு நிபுணர் மற்றும் அரசு ஆலோசகர் ஆண்டனி பவுஸி. இவர் கொரோனாவுக்கு அமெரிக்காவில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என முன்னதாக தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு நேர் எதிராக குடியரசுக் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.


latest tamil news


அமெரிக்காவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா நோய்த்தாக்கம் அமெரிக்கர்களை பீதி அடைய செய்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னதாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அமெரிக்காவில் பரவும் கொரோனாவில் 99% அபாயகரமானதல்ல எனத் தெரிவித்து இருந்தார்.

இதனை ஆண்டனி பவுஸி முன்னதாக எதிர்த்தார். டிரம்ப் எதை வைத்து இதனை கூறுகிறார் எனத் தெரியவில்லை. அவருக்கு எவ்வாறு இந்தப் புள்ளிவிவரங்கள் கிடைத்தன எனத் தெரியவில்லை. 99% பாதிப்பில்லை எனக் கூறுவது ஏற்புடையது அல்ல. அதற்கு தக்க ஆதாரங்கள் இல்லாத நிலையில் இவ்வாறு கூறுவது தவறு என்று இருந்தார். இது குடியரசுக் கட்சியினர் அதிருப்தி அடையச் செய்தது.


latest tamil news


இதனையடுத்து தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த டிரம்ப் ஆண்டனியை சாடியிருந்தார். நோய்தொற்று நிபுணரான ஆண்டனி பவுஸி மிகவும் நல்லவர், ஆனால் அவர் தனது பணியில் பல தவறுகளை செய்துள்ளார் எனத் தெரிவித்திருந்தார்.

வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகராக விளங்கும் பவுஸியை புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது என ஜனநாயக கட்சி ஹவுஸ் இன்டலிஜென்ஸ் கமிட்டி சேர்மன் ஆடம் தெரிவித்துள்ளார். ஆண்டனியின் கருத்துக்களைப் புறக்கணிப்பது ஏற்புடையதல்ல. இதனால் அமெரிக்கா தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் செயலாளர் கேத்தரின் சபிலஸ் தெரிவித்துள்ளார்.


latest tamil news


இதுவரை, தன்னை எதிர்க்கும் அரசியல் தலைவர்களது கருத்துகளுக்கு பவுஸி நேரடியாக பதில் அளிக்கவில்லை. கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது என்ற பொய்யை டிரம்ப் அரசு மீண்டும் மீண்டும் தெரிவித்து அரசியல் லாபம் ஈட்டப் பார்க்கிறது, அதனால் உண்மை நிலவரத்தை போட்டு உடைக்கும் ஆண்டனியை இவர்களுக்குப் பிடிக்கவில்லை. இதனால் அவரை தொடர்ந்து குடியரசு கட்சி எதிர்த்து வருகிறது என ஜனநாயக கட்சி குற்றம் சாட்டுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shan - jammu and kashmir,இந்தியா
13-ஜூலை-202016:18:31 IST Report Abuse
shan டாக்டர்கள் முதலில் அறிகுறிகள் இருக்கும் அது பத்து வாரத்தில் பலமிழந்து விடும், பின்னர் முப்பது டிகிரியில் தாக்கு பிடிக்காது வெயில் காலம் வந்ததும் காணாமல் போய்விடும் அவர்கள் எந்த ஆதாரத்தை வைத்து கதை கட்டினார்கள், இன்று அறிகுறி இருக்கவில்லையா கொரோனா கண் சிவந்து விட்டதா கொரோனா கைமாறது விட்டதா கொரோனா இப்ப லடேஸ்ட் எப்படியும் கொரோனா இதையே மற்றவர்கள் ஏன் மற்றவர்கள் சொன்னால் கொரோனா சட்டத்தில் உள்ளெ சித்த மருந்து கொடுத்து குணமானால் போர்முலா சொல்லு இல்லையேல் மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்தவர் போல உள்ளே ? மருந்து இல்லை பச்சிலை கொடுத்து சிகிச்சையை எல்லா சிதவைதியருக்கும் அனுமதி ஏன் கொடுக்க மாட்டேன்கிறது அரசு ஒருபத்திலும் இல்லை உண்மையில் இப்ப கொரோனா வலுவில்லை என்பது மருந்து இல்லாமலே தினம் இருபதாயிரம் குணமடைவதிலிருந்து தெரியவில்லையா
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
13-ஜூலை-202015:54:39 IST Report Abuse
Raj தலைமை மருத்துவ ஆலோசகர் சொல்வதை கேட்பது தான் டிரம்ப்கு அழகு
Rate this:
Cancel
Madhav - Chennai,இந்தியா
13-ஜூலை-202015:34:01 IST Report Abuse
Madhav ஆண்டனி அறிவியல்பூர்வமாக பேசுகிறார் அவர்கள் நாட்டில் உள்ள தலை சிறந்த தொற்று நோய் ஆராய்ச்சியாளர் மறுபக்கத்தில் எந்த வித அறிவும் இல்லாத இனவெறி அரசியல்வாதி போர்களை இராணுவம் நடத்துவது மாதிரி, இந்த பெருந்தொற்று காலத்தில், மருத்துவ அறிஞர்கள் தான் முடிவுகளை எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X