கொரோனா போரில் இந்தியா நல்ல நிலையில் இருக்கிறதா?: ராகுல் கேள்வி

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
Rahul gandhi, Congress, Coronavirus, Amit shah, ராகுல், காங்கிரஸ், கொரோனா, பரவல், நல்ல நிலையில், இருக்கிறதா, அமித்ஷா

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் இந்தியா நல்ல நிலையில் இருப்பதாக கூறிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு, வரைபடம் மூலம் காங்., எம்பி., ராகுல் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 8.78 லட்சத்தைக் கடந்துள்ளது. 23,174 பேர் உயிரிழந்துள்ளனர், 5.5 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ‛கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா நல்ல நிலையில் இருக்கிறது. கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன், ஆர்வத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது,' என்றார்.


latest tamil news



இந்நிலையில், காங்., எம்பி., ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில், உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் மார்ச் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்தில் தினசரி நிகழ்ந்த பாதிப்புகள் குறித்த காலக்கோடுடன் கூடிய வரைபடத்தை பகிர்ந்துள்ளார்.
இதில், தென் கொரியா, நியூசிலாந்து நாடுகள் தங்கள் நாடுகளில் பாதிப்பை கட்டுப்படுத்துவது போலவும், அமெரிக்கா, இந்தியா நாடுகளில் பாதிப்பு அதிகரித்ததும் காட்டுகிறது. வரைபடத்தை பகிர்ந்த ராகுல், ‛கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலையில் இருக்கிறதா?' எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
13-ஜூலை-202021:38:22 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI முதல்ல இந்த ஆளை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்புங்க .
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
13-ஜூலை-202021:20:27 IST Report Abuse
madhavan rajan பல மாநிலங்கள் நல்ல நிலையில் உள்ளன. உங்கள் கட்சி கூட்டணி நடக்கும் மஹாராஷ்டிரா என்ற மாநிலம்தான் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. உங்கள் கட்சியின் மந்திரிகள் மாநில நிலைமையை கவனிக்காமல் எப்போதும்போல சம்பாதிப்பதில் குறியாக இருக்கிறார்கள். நீங்கள் உங்கள் உடம்பில் அழுக்கை பார்க்காமல் பிறரிடம் இருக்கும் அழுகையே பார்த்துக் கொண்டிருப்பதால் இதெல்லாம் தெரிவதில்லை.
Rate this:
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
13-ஜூலை-202020:57:13 IST Report Abuse
Raghuraman Narayanan நீங்கதான் உங்களுக்கு தெரிந்த இத்தாலியரிடம் கேட்டு அவங்க நாட்டில் எடுக்கப் பட்ட நடவடிக்கைகளையும் நம் நாட்டில் எடுக்கப் பட்ட நடவடிக்கைகளுக்கும் ஒப்பிட்டு சொல்ல சொல்லணும், உயிரிழப்பு உட்பட.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X