கேரள அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்: எதிர்க்கட்சிகள் முடிவு| Gold smuggling case: Opposition to bring no-confidence motion against Kerala Government | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரள அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்: எதிர்க்கட்சிகள் முடிவு

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (11)
Share

திருவனந்தபுரம்: 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டி, அவரின் அரசுக்கு எதிராக, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி முடிவு செய்துள்ளது.latest tamil newsகேரளாவில் ஐக்கிய அரபு அமீரகம் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட, 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கடந்த மாதம் 30ம் தேதி திருவனந்தபுரம் விமானநிலையத்தில் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமார் கைது செய்யப்பட்டார். தற்போது தங்கம் கடத்தல் வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.,) மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் இருவரையும் என்.ஐ.ஏ.,யினர் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரக தூதரத்தின் முன்னாள் ஊழியர், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் விற்பனை மேலாளராகா இருந்தபோது இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இந்த விவகாரம் வெளியானதும், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராகவும், முதல்வரின் தனிப்பரிவுச் செயலாளராகவும் இருந்த சிவசங்கரன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.


latest tamil newsஇந்நிலையில் காங்., ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பென்னி பெஹனன் தெரிவித்துள்ளதாவது:

தங்கக் கடத்தலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றியவர். இந்த விவகாரத்தில் முதல்வருக்கு அனைத்து விவரங்களும் தெரியும். குற்றம்சாட்டப்பட்டவர்களை மறைக்க முதல்வர் அலுவலகம் முயல்கிறது. இந்த விவகாரத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமும், முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் விலக வேண்டும் எனக் கோரியும் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர உள்ளோம்.

இவ்வாறு பெஹனன் தெரிவித்தார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X