பொது செய்தி

இந்தியா

இணையை கவர மஞ்சள் நிறத்திற்கு மாறிய தவளைகள்: வைரல் வீடியோ

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Frogs, Monsoon, Trending Video, viral video, தவளைகள், மஞ்சள், நிறம், இணையை கவர, வைரல் வீடியோ

புதுடில்லி: ம.பி.,யில் மழைநீர் குளம் ஒன்றில் அதிக எண்ணிக்கையில் மஞ்சள் நிறத்திலான ஆண் தவளைகள் விளையாடி மகிழும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில், 'நீங்கள் எப்போதாவது இவ்வளவு மஞ்சள் தவளைகளை பார்த்திருக்கிறீர்களா? இவையனைத்தும் நரசிக்பூரில் காணப்படும் இந்திய ஆண் தவளைகள். மழைக்காலத்தில் தனது இணையை கவர்வதற்காக அவை மஞ்சள் நிறமாக மாறியுள்ளன. அவை எப்படி மழையை அனுபவிக்கின்றன என்பதை பாருங்கள்' என பதிவிட்டிருந்தார்.

வழக்கமாக ஆண் தவளைகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பதில்லை. இனப்பெருக்க காலத்தில் தங்களது பெண் இணையை கவர்வதற்காக இதுபோன்று மாற்றி கொள்கின்றன. இயற்கையான இந்த நிறமாற்றம் மழைக்காலத்தில் நிகழ்கிறது. வீடியோவை பகிர்ந்த பின்னர் மஞ்சள் நிற இந்திய ஆண் தவளையின் படத்தை கஸ்வான் வெளியிட்டார்.


latest tamil news


இது இனச்சேர்க்கை பருவத்தில் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய ஒரு பார்வையை நெட்டிசன்களுக்கு அளிக்கிறது. இந்த நிகழ்வுக்கும் கொரோனா தொற்று அல்லது வெட்டுக்கிளி தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இதுபோன்று நடந்து கொள்வது மிகவும் இயல்பானது. ஆனால் பிரச்னை என்னவென்றால் நிறைய ஆண்கள் தங்கள் இணையை பெறுவார்களா என்பதுதான். உண்மையான போட்டி' எனவும் கூறியுள்ளார்.

சமூகவலைதளமான டுவிட்டரில் கஸ்வானின் வீடியோவை இதுவரை சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரசித்து பார்த்ததுடன், மஞ்சள் நிற தவளையை முதலில் பார்த்த அனுபவங்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜூலை-202020:37:28 IST Report Abuse
அருணா மஞ்சள் வண்ணத்திற்கு தவளைகளும் மயங்குமா.
Rate this:
Cancel
13-ஜூலை-202019:31:44 IST Report Abuse
சிவம் மஞ்சள் நிறமுள்ள தவளைகள் அதிக விஷத்தன்மை கொண்டவை என்று எப்போதோ டிஸ்கேவரி சேனலில் பார்த்த ஞாபகம்...
Rate this:
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
13-ஜூலை-202018:15:35 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா மஞ்சள்நிறம், இணைவி, இது உங்களுக்கு அவரை நினைவூட்டினால் கம்பெனி பொறுப்பல்ல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X