ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
காங்கிரஸ், எம்எல்ஏ, ரிசார்ட், சச்சின் பைலட்,

ஜெய்ப்பூர்: ராஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், முதல்வர் அசோக் கெலாட்டிற்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, கூட்டத்தில் கலந்து கொண்ட 102 பேரும் ரிசார்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் - துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. தனக்கு 30 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாகவும், மாநில அரசு பெரும்பான்மை இழந்துவிட்டதாக சச்சின் பைலட் அறிவித்தது மாநில அரசுக்கு சிக்கல் ஏற்படுத்தியது. தொடர்ந்து, பா.ஜ.,வில் இணைய போவதாக வெளியான தகவலை சச்சின் பைலட் மறுத்துள்ளார்.


latest tamil news
இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு முதல்வர் அசோக் கெலாட் அழைப்பு விடுத்திருந்தார். முதல்வர் வீட்டில் நடந்த இந்த கூட்டத்தில் 107 எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டதாக முதல்வரின் செயலாளர் கூறியுள்ளார். இந்த கூட்டத்திற்கு பின் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு பா.ஜ., தான் காரணம். அரசின் சிறந்த நிர்வாகத்தால் பயப்படும் பா.ஜ., குதிரை பேரம் நடத்தி எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்கி ஜனநாயகத்தை அழிக்க நினைக்கிறது. கட்சி தலைமை மற்றும் நிர்வாகிகள் மீது நம்பிக்கை உள்ளது. பா.ஜ.,வின் செயல் ராஜஸ்தான் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம். அதை மக்கள் ஏற்கமாட்டார்கள். சோனியா, ராகுல், முதல்வர் அசோக் கெலாட் மீது நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் அரசுக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபடும் எம்.எல்.ஏ.,க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஇதனை தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சொகுசு பஸ் மூலம் ரிசார்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜெய்ப்பூரில் உள்ள பேர்மோன்ட் ஓட்டலில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எத்தனை நாட்கள் தங்க வைக்கப்பட்டிருப்பார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. இதனிடையே, இந்த கூட்டத்தில் 20 எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொள்ளவில்லை என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya,இந்தியா
13-ஜூலை-202021:57:28 IST Report Abuse
Rajan அடுத்து மகாராஷ்டிரா, எனது விண்ணப்பம் அமிட்ஜுக்கு, dmk மொத்தம் மோசடி கம்பெனி காலி செய்ய வேண்டி,
Rate this:
Cancel
13-ஜூலை-202019:38:56 IST Report Abuse
அண்ணா வழியில் கலைஞர் ஆட்சி அமைப்போம் பிள்ளை பிடிக்கிறவன் பண பெட்டியோடு சுத்தி கொண்டு இருக்கும் போது வேறு என்ன செய்ய முடியம்
Rate this:
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
13-ஜூலை-202020:18:10 IST Report Abuse
Anbu TamilanI think you are speaking about Maharashtra & DMK , Kattumaram during Amma death etc...
Rate this:
Venkat, UAE - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜூலை-202020:30:03 IST Report Abuse
Venkat, UAEAll these are happening due to the problems between Ashok Kelot and Sachin Pilot....
Rate this:
13-ஜூலை-202021:39:09 IST Report Abuse
அண்ணா வழியில் கலைஞர் ஆட்சி அமைப்போம் unga amma oru thirudi accuste1 kavanathil vai...
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
13-ஜூலை-202018:44:42 IST Report Abuse
A.George Alphonse மகா கேவலமான பிறவிகள். நாட்டு மக்கள் கொத்து கொத்தாக காரோண வைரசுக்கு பலியாகி வரும் இந்த நாளில் இவர்களுக்கு இந்த அரசியல் விளையாட்டும்,சொகுசு ரெசார்ட்டும் தேவையா?
Rate this:
13-ஜூலை-202019:41:21 IST Report Abuse
அண்ணா வழியில் கலைஞர் ஆட்சி அமைப்போம் இந்த அரசியல் விளையாட்டு தேவையா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X