கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு; பாதிரியாரின் ஜாமின் ரத்து

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
Kerala, Bishop, FrancoMulakkal, Bail, Cancelled, Nun, RapeCase

கோட்டயம்: கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் பிராங்கோ முளக்கலின் ஜாமின் கோட்டயம் மாவட்ட நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் ஜலந்தர் திருச்சபையைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், அச்சபையின் பாதிரியார் பிராங்கோ முளக்கல் மீது கடந்த 2018ம் ஆண்டு பாலியல் புகார் அளித்தார். அதையடுத்து, சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் பிராங்கோ முளக்கலை கைது செய்தனர். அவா் மீது கோட்டயம் காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.


latest tamil news



இந்நிலையில், தன் மீது குற்றம் எதுவுமில்லை எனவும், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரியும் விசாரணை நீதிமன்றத்தில் முளக்கல் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணை நீதிமன்றம் கடந்த மார்ச்சில் தள்ளுபடி செய்திருந்தது. அதற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் அவா் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்றைய விசாரணைக்கு பாதிரியார் ஆஜராகவில்லை. அவரது வக்கீல், பஞ்சாபில் உள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதிரியார் சிக்கிக்கொண்டதாக கூறினார். ஆனால் எதிர்தரப்பு வக்கீல், ‛குறிப்பிட்ட அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதி இல்லை,' என வாதாடினார். எதிர்தரப்பு வக்கீலின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பாதிரியாரின் ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivak - Chennai,இந்தியா
15-ஜூலை-202009:54:24 IST Report Abuse
Sivak இன்னும் நெறைய சுத்திகிட்டு இருக்கு ...
Rate this:
Cancel
sathyam - Delhi,இந்தியா
14-ஜூலை-202010:18:45 IST Report Abuse
sathyam எப்படித்தான் தமிழகத்தில் தாக்கு பிடிக்க போகிறதோ
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
14-ஜூலை-202005:37:37 IST Report Abuse
 Muruga Vel ஆசீர்வாதம் பாஸ்டர்ங்க நடத்துற சுகமளிக்கும் கூட்டங்களிலும் இந்துக்களின் கல்யாண விசேஷங்களில் தான் கிடைக்கும் ..இங்கே வேற லெவல் ...அதுக்கு மேல போகணும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X