பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா: பலி 2 ஆயிரத்தை தாண்டியது

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்


சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42, 978 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 105 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. அதில்(53 அரசு ஆய்வகம் மற்றும் 52 தனியார் ஆய்வகம்) இன்று 4,328 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில் 4,270 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என 58 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 44,560 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதனுடன் சேர்த்து 16,54,008 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இன்று மட்டும் 43,548 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 15,85,782 ஆக அதிகரித்தது.


latest tamil news



இன்று கொரோனா உறுதியானவர்களில் 2,576 பேர் ஆண்கள். 1752 பேர் பெண்கள். இதனால், மொத்த கொரோனா பாதிப்பில், 87,111 பேர் ஆண்கள். 55,664 பேர் பெண்கள் மற்றும் 23 பேர் மூன்றாம் பாலினத்தவர். இன்று மட்டும், 3,035 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 92,567 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 48, 196 பேர் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று மட்டும் 66 பேர்( 16 பேர் தனியார் மருத்துவமனையிலும் 50 பேர் அரசு மருத்துவமனையிலும்) உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karupatti Subbiah - Thoothukudi,இந்தியா
13-ஜூலை-202018:41:59 IST Report Abuse
Karupatti Subbiah கிட்டத்தட்ட 98% பேருக்கு மிகவும் சொற்ப அறிகுறிகள் தான் உள்ளது. 2% பேருக்கு மூச்சுத்திணற ஏற்பட்டு மரணிக்கிறார்கள். அரசு அந்த 2% பேருக்கு மட்டும் சிகிச்சை அளித்தால் உயிர்களை காப்பாற்ற முடியும்..எப்படியும் அடுத்த எலெக்ஷனுக்கு இலவசம் கொடுத்து தான் ஆகணும். அதனால இப்பவே வீட்டுக்கு ஒரு பல்ஸ் ஒக்ஸிமேன்டர் இலவசமா கொடுத்து 94 க்கு கீழ ஆக்ஸிஜன் செல்லும் நபர்களை மட்டும் கவனித்து சிகிச்சை அளித்தால் உயிர்களையும் காப்பாத்தி அடுத்த முதல்வராக எடப்பாடி வர வாய்ப்புஇருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X