மே.வங்கத்தில் பரபரப்பு: மார்க்கெட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த பாஜ., எம்எல்ஏ

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
WestBengal, BJP_MLA, DebendraNath, HangingInMarket, பாஜ, எம்எல்ஏ, தூக்கு, மார்க்கெட், மேற்குவங்கம்

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் மார்க்கெட் பகுதியில் பாஜ., எம்எல்ஏ ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்கத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டில் பாஜ., எம்எல்ஏ தேபேந்திர நாத், தனது வீட்டில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள மார்க்கெட்டில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டிற்கு சிலர் வந்து அவரை அழைத்து சென்றதாக கூறினார். பாஜ., தரப்பினர், இது கொலை என குற்றம்சாட்டியுள்ளனர்.


latest tamil news


இதுதொடர்பாக பாஜ., தலைவர் கைலாஷ் விஜய்வார்கியா தனது டுவிட்டர் பக்கத்தில், ‛மேற்குவங்கத்தில் பாஜ., தலைவர்கள் கொல்லப்படுவதற்கு முடிவே இல்லையா? கொல்லப்பட்ட எம்.எல்.ஏ திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜ.,வில் இணைந்தவர். அவர் பாஜ.,வில் இணைந்ததால் தான் கொலை செய்யப்பட்டாரா?' எனக் கேள்விகளுடன் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya,இந்தியா
13-ஜூலை-202021:49:12 IST Report Abuse
Rajan சபாஷ் தீதி, கட்டுமரம் சூசை எல்லாம் ஒன்னும் இல்லை, தீதி ய எதிர்த்தால் யாரா இருந்தாலும் இது தான் கதி
Rate this:
வல்வில் ஓரி - அடுத்தவர் ID திருடும் ,பஞ்சம பரதேசி ,இந்தியா
13-ஜூலை-202022:28:02 IST Report Abuse
வல்வில் ஓரிஉங்க அம்மாவை எதித்து இருந்தால் ????????...
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
13-ஜூலை-202020:41:30 IST Report Abuse
Rpalnivelu ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
Rate this:
Cancel
13-ஜூலை-202020:29:38 IST Report Abuse
மதுமிதா உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல். கொடுமை. குற்றவாளியை கண்டறிந்து விசாரணையே இல்லாமல் தூக்கில் இடவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X