பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு: சென்னையில் குறைகிறது; மற்ற மாவட்டங்களில் அதிகரிக்கிறது

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை, கொரோனா, மாவட்டங்கள், மதுரை, பாதிப்பு, அதிகரிப்பு,

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று சென்னையில் 1140 பேருக்கு கொரோனா உறுதியானது. அதேநேரத்தில், மதுரையில் இதுவரை இல்லாத அளவாக 464 பேருக்கு கொரோனா உறுதியானது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இன்று, 10வதுநாளாக 2 ஆயிரத்திற்கு கீழ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இன்று 1,140 பேருக்கு உறுதியானது. இதனால், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,573 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 1,277 பேர் உயிரிழந்துள்ளனர்.சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 755 பேர் உயிரிழந்தனர்.

மாற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இன்று சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில், இதுவரை இல்லாத அளவாக 464 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பாதிக்கட்டவர்களின் எண்ணிக்கை 6,539 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் 337 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 352 பேருக்கும், செங்கல்பட்டில் 219 பேருக்கும், கன்னியாகுமரியில் 184 பேருக்கும், விழுப்புரத்தில் 136 பேருக்கும், தேனியில் 134 பேருக்கும், வேலூரில் 129 பேருக்கும், ராணிப்பேட்டையில் 126 பேருக்கும், திருநெல்வேலியில் 113 பேருக்கும், தூத்துக்குடியில் 122 பேருக்கும் இன்று கொரோனா உறுதியானது.


மாவட்ட வாரியாக பாதிப்புlatest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
ஊட்டியில்

ஊட்டியில் இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது. அதில் 93 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Perumal - Chennai,இந்தியா
13-ஜூலை-202020:16:12 IST Report Abuse
Perumal Some DMK cadres are comparing number of testing done in Delhi per million population with number of testing done in Tamil Nadu,without comparing the total population of each state.
Rate this:
Cancel
chidambaram - Chennai,இந்தியா
13-ஜூலை-202020:05:06 IST Report Abuse
chidambaram இதுதானே appa நான் 15 நாள் முன்னாடி சொன்னது Gov சென்னை lockdown போட்டுட்டு எல்லோரையும் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி கொரோனா பரவ காரணம் . அப்பறம் சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது news போடத்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X