சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: கொலை வழக்காக மாற்றியது சிபிஐ

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
SathankulamCase, CBI, murder case, சாத்தான்குளம், சிபிஐ

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்தில் சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவு செய்தது.

கடந்த மாதம், தமிழகத்தின் துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், 59, மற்றும் அவரது மகன் பெனிக்ஸ், 31, ஆகியோரை, ஊரடங்கு காலத்தில், குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாக கடையை திறந்து வைத்ததாக கூறி, போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை, காவல் நிலையத்தில் வைத்து கொடூரமான முறையில் போலீசார் தாக்கியுள்ளனர். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் இருவரும், அடுத்த நாளே உயிரிழந்தனர்.


latest tamil news



இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை, முதலில், சி.பி.சி.ஐ.டி., விசாரித்தது. பின்பு, சி.பி.ஐ., எனப்படும், மத்திய புலனாய்வு அமைப்பிடம், இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், சந்தேக மரணமாக பதிந்திருந்த இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவு செய்துள்ளது. இது இவ்வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், முதல் குற்றவாளியாக எஸ்.ஐ., ரகு கணேசையும், 4வது குற்றவாளியாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரையும் சேர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
13-ஜூலை-202023:24:31 IST Report Abuse
தல புராணம் அப்பாடா, வழக்கை இப்பத்தான் மாத்தியிருக்காங்க..
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
13-ஜூலை-202022:21:04 IST Report Abuse
sankaseshan தா கிருட்டிணன்.ராமஜெயம், தினகரன் ஊழியர்களின் கொலை வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன எப்போது முடிந்து தண்டனை கொடுப்பார்கள் ?
Rate this:
Cancel
Rajan - Alloliya,இந்தியா
13-ஜூலை-202022:01:08 IST Report Abuse
Rajan சிபிஐ அண்ணே அவனுங்க ஸ்கெட்ச் போட்டது சொறிவாலயம் ஸ்டைல், தீர விசாரிங்க, சூசை ஒரு வேலை ஐடியா குடுத்திருப்பான், ஓட்டு வாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X