பொது செய்தி

இந்தியா

உலக அளவில் கொரோனாவுக்கு 3000 மருத்துவ பணியாளர்கள் பலி

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: உலக அளவில் இதுவரை 3,000 மருத்துவ பணயாளர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்கள் என ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.



latest tamil news




இது குறைந்த பட்ச எண்ணிக்கை மட்டுமே எனவும், பல நாடுகள் மருத்துவ பணியாளர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் எண்ணிக்கை பல மடங்காக இருக்கும் என மேலும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தங்களிடம் பதிவான விவரங்களின் அடிப்படையில் ரஷ்யாவில் அதிகபட்சமாக 545 பேரும், பிரிட்டனில் 540 பேரும், அமெரிக்காவில் 507 பேரும் பலியாகி உள்ளதாக அது தெரிவித்துள்ளது.


latest tamil news



இது குறித்து அந்த அமைப்பின் ஆய்வாளர் சன்ஹிதா அம்பாஸ்ட் கூறுகையில், ' உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் ஒவ்வொரு நாடும் தங்களது மருத்துவ பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும். ஒரு சில நாடுகளில் தங்கள் பாதுகாப்பை வலியுறுத்தி போராடும் மருத்துவ பணியாளர்கள் தண்டிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. தாங்கள் நடத்திய ஆய்வில் 63க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதுகாப்பு கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிகிறது' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X