கொரோனாவுக்கு பலியானவர் உடலை டிராக்டரில் கொண்டு சென்ற டாக்டர்| Dinamalar

கொரோனாவுக்கு பலியானவர் உடலை டிராக்டரில் கொண்டு சென்ற டாக்டர்

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (8)
Share
ஐதராபாத்: தெலுங்கானாவில் கொரோனா வைரசால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய டிராக்டரில் எடுத்துச்சென்ற டாக்டர் டிராக்டரை தானே ஓட்டிச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.தெலுங்கானாவின் பெடப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீராம், அங்குள்ள அரசு மருத்துவமனை டாக்டராக பணியாற்றி, கொரோனா பரவல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாகவும் உள்ளார். இந்நிலையில், கொரோனா பாதித்ததில் உயிரிழந்த
Telangana doctor drives tractor to transport Covid-19 victim's body for last rites

ஐதராபாத்: தெலுங்கானாவில் கொரோனா வைரசால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய டிராக்டரில் எடுத்துச்சென்ற டாக்டர் டிராக்டரை தானே ஓட்டிச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.

தெலுங்கானாவின் பெடப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீராம், அங்குள்ள அரசு மருத்துவமனை டாக்டராக பணியாற்றி, கொரோனா பரவல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாகவும் உள்ளார். இந்நிலையில், கொரோனா பாதித்ததில் உயிரிழந்த ஒருவரது உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்து செல்ல வேண்டியிருந்தது. உடலை கொண்டு சென்று அடக்கம் செய்ய மாவட்ட நகராட்சி வாகன ஓட்டுனர் வர மறுத்தார்.


latest tamil newsஉடலை அடக்கம் செய்ய யாரும் வராத நிலையில், சற்றும் யோசிக்காத டாக்டர் தனிநபர் பாதுகாப்பு உபகரணம் அணிந்து கொண்டு டிராக்டர் ஒன்றில் உடலை ஏற்றி அதனை மயானத்திற்கு அவரே ஓட்டி சென்றார்.

கொரோனா நோயாளியின் உடலை எடுத்து செல்ல பலரும் தயக்கம் காட்டி வரும் நிலையில், டாக்டரின் மனிதாபிமான செயலுக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டு குவிந்தது. தெலுங்கானா அமைச்சர் ஹரீஷ் ராவ் டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X