ராஜஸ்தான் காங்., தலைவர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில அரசியலில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில், மாநில காங்கிரஸ் துணை தலைவர் தர்மேந்திர ரத்தோர், ராஜீவ் அரோரா ஆகியோரின் வீடுகள் உட்பட பல இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.



latest tamil news



ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் - துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. தனக்கு 30 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாகவும், மாநில அரசு பெரும்பான்மை இழந்துவிட்டதாக சச்சின் பைலட் அறிவித்தது மாநில அரசுக்கு சிக்கல் ஏற்படுத்தியது. தொடர்ந்து, பா.ஜ.,வில் இணைய போவதாக வெளியான தகவலை சச்சின் பைலட் மறுத்துள்ளார்.

இந்நிலையில், ராஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், முதல்வர் அசோக் கெலாட்டிற்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, கூட்டத்தில் கலந்து கொண்ட 102 பேரும் ரிசார்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


latest tamil news



இந்த பரபரப்பான அரசியல் சூழலில், ராஜஸ்தானில் உள்ள காங்., தலைவர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது. காங்கிரஸ் துணை தலைவர் தர்மேந்திர ரத்தோர், ராஜீவ் அரோரா ஆகியோரின் வீடுகளில் ரெய்டு நடைபெற்றது. மேலும், அரோராவின் அலுவலகம், நண்பர்கள் வீடுகள், காங்., கட்சியினருக்கு நெருக்கமாக இருக்கும் நபர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. டில்லி, மஹா, மும்பையில் சில இடங்களிலும் சோதனை நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜூலை-202022:49:01 IST Report Abuse
தமிழ்வேல் ஆட்சி கவிழ்ப்பிற்கும் வருமான வரி ரெயிடிற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது சாணக்கியத்தனத்தில் வரும்.
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
13-ஜூலை-202022:01:13 IST Report Abuse
S.Ganesan தவறான முன்னுதாரணம். பாஜக அரசு திட்டமிட்டுஆட்சியை கவிழ்க்க செயல்படுவது வெளிப்படையாக தெரிகிறது
Rate this:
Cancel
13-ஜூலை-202021:33:23 IST Report Abuse
அண்ணா வழியில் கலைஞர் ஆட்சி அமைப்போம் இம்போடென்ட்ஸ் பண்ணும் வேலை இது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X