பொது செய்தி

இந்தியா

சில்லறை பணவீக்கம் 6.09 % ஆக அதிகரிப்பு

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி : நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் நாட்டின் சில்லறை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 6.09 சதவீதமாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடைசியாக நடப்பாண்டு மார்ச் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 5.84 சதவீதமாக இருந்தது.



latest tamil news



கொரோனா தொற்று பரவல் காரணமாக தரவுகளை சேமிக்க இயலாத காரணத்தால், நடப்பாண்டில், ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான பணவீக்கத்தை மத்திய அரசின் புள்ளிவிவரம் மற்றும் அமலாக்கத்துறை அலுவலகம் வெளியிடவில்லை. தற்போதைய பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் நடுத்தர கால பணவீக்க இலக்கான 4 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது.


latest tamil news



சில்லறை பணவீக்கத்தை தீர்மானிப்பத்தில் இரு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை முக்கிய காரணியாக விளங்குகிறது. கொரோனா ஊரடங்கு துவங்கிய மார்ச்.25ல் இருந்து ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை ஒட்டுமொத்தமாக 115 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூலை-202006:01:17 IST Report Abuse
ஆப்பு இது ஒரு மேட்டரே இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X