பொது செய்தி

இந்தியா

கேரளாவில் புதிதாக 449 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020
Share
Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,322 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிப்பு அடைந்தவர்களில் 140 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 64 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் மீதிப் பேர்களுக்கு தொடர்பின் மூலம் தொற்று ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.



latest tamil news



இன்று அதிகபட்சமாக ஆலப்புழா மாவட்டத்தில் 119 பேருக்கும், திருவனந்தபுரம் மாவட்டத்தில் 63 பேருக்கும் மலப்புரம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் 47 பேருக்கும், கண்ணூர் மாவட்டத்தில் 44 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தில் 33 பேருக்கும், பாலக்காடு மாவட்டத்தில் 19 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தில் 16 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 15 பேருக்கும், வயநாட்டில் 14 பேருக்கும், கோட்டயம் மாவட்டத்தில் 10 பேருக்கும், திருச்சூர், காசர்கோடு, இடுக்கி மாவட்டங்களில் தலா 4 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.


latest tamil news



இன்று மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு பலியானதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. அங்கு இறப்பு விகிதம் 0.39 சதவீதமாக உள்ளது. மாநிலம் முழுவதும் 1,80,594 பேர் கண்காணிப்பில் உள்ளனர், 4,376 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,44,388 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 5,407 மாதிரிகளின் சோதனை முடிவுகள் வெளியாகவில்லை இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X