தங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் பாதுகாக்க மாட்டோம்: பினராயி

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement

திருவனந்தபுரம்: தங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.



latest tamil news



இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தாவது: தங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது. என்.ஐ.ஏ., விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். தங்க கடத்தல் பணம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக என்.ஐ.ஏ., தெரிவித்துள்ளது. இதில் சம்பத்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் விசாரணை நடத்த முடிவு செய்தாலும், அதற்கு முழு அனுமதி அளிக்கப்படும். விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வரட்டும்.


latest tamil news



ஸ்வப்னாவிடம் தொடர்பில் இருந்த முதன்மை செயலர் சிவசங்கர், அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஐடி.,யில் ஸ்வாப்னாவிற்கு பதவி வழங்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
14-ஜூலை-202006:52:19 IST Report Abuse
sridhar கேரளாவை கெடுத்து குட்டிச்சுவராகிய பெருமை காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளுக்கு உண்டு. ஹிந்துக்கள் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் ஜாதி சண்டையில்... பரசுராம க்ஷேத்திரம் இன்று பிற மத க்ஷேத்திரமாக மாறி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அழகை இழந்து கொண்டிருக்கிறது.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
14-ஜூலை-202006:44:20 IST Report Abuse
sridhar எப்படி ஸ்வப்னாவின் பிடியில் நான் சிக்கி அவள் சொன்னதை எல்லாம் செய்தேன் என்பதை மேலோட்டமாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
14-ஜூலை-202006:06:15 IST Report Abuse
Indhuindian கிராமத்துல சொல்லுவாங்களே திருடனை பிடிக்க ஜனங்க திருடன் திருடன்னு காத்திக்கிட்டு ஓடினா அதை கேட்டு அந்த திருடனும் திருடன் திருடன்ன்னு காத்திக்கிட்டு ஓடினான்னு - மனசிலாயோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X