நானும் 'மன் கி பாத்'தில் பேசுவேன்: ராகுல் அறிவிப்பு

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (50)
Share
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: ராஜஸ்தான் காங்.,கில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வரும் நிலையில் 'நாளை முதல் என் கருத்துக்களை வீடியோவாக உங்களிடம் பகிர்கிறேன்' என காங்., எம்.பி., ராகுல் டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் - துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. தனக்கு 30 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாகவும், மாநில அரசு பெரும்பான்மை இழந்துவிட்டதாக சச்சின் பைலட் அறிவித்தது மாநில அரசுக்கு சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. அவர் பா.ஜ.,வில் இணைவார் எனவும், விரைவில் சோனியா, ராகுலை சந்திப்பார் எனவும் இரு வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த பரபரப்புக்கு மத்தியில், காங்., எம்.பி., ராகுல் டுவிட்டரில் பதிவிட்டதாவது: இன்று பெரும்பான்மையான இந்திய ஊடகங்கள், பாசிச நோக்கத்தோடு செயல்பட்டுள்ளன. வாட்ஸ்அப் பார்வர்டு மற்றும் தவறான தகவல்களை வைத்து, டிவி சேனல்கள் வெறுப்பை கக்கியுள்ளன. இது போன்ற தவறான அணுகுமுறை இந்தியாவை சுக்குநூறாக்குகிறது. எங்களின் தினசரி நடவடிக்கைகள், வரலாறு மற்றும் நெருக்கடிகள் குறித்து மிகத் தெளிவாக சொல்ல இருக்கிறோம். உண்மையை அறிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு அது உதவும். நாளை முதல், எனது கருத்துகளை வீடியோ மூலம் நான் பகிர உள்ளேன். இவ்வாறு அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


latest tamil news



பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பேசி வரும் நிலையில், அதுபோல ராகுலும் மக்களிடம் பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மன் கி பாத் போலவே, கடந்த ஆண்டு அக்., மாதத்தில், 'தேஷ் கி பாத்' எனும் தலைப்பில் காங்., கருத்து தெரிவிக்க உள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
16-ஜூலை-202013:13:43 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை இங்கே உள்ள கருதுகளை படித்தால் நாட்டில் அறிவில்லாத அடிமைகள் நிறைய பேர் உள்ளது தெரிகிறது.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஜூலை-202009:07:14 IST Report Abuse
Lion Drsekar சிறு வயதில் ஒரு கதை நாம் படித்திருக்கிறோம், தொப்பி விற்பவர் ஒரு மரத்தடியில் தூங்கிவிட்டாராம் அவர் கூடையில் வைத்திருந்த எல்லா தொப்பிகளை மரத்தின் மீது இருந்த மனிதரின் முன்னோடிகளான குரங்குகள் எடுத்துக்கொண்டு விளையாடியும் தலையில் போட்டுக்கொண்டு இருக்க, விழித்துக்கொண்ட அந்த வியாபாரி அலறி செய்வது அறியாமல் என்ன என்னவோ செய்தும் அந்த குரங்குகள் எதற்கும் கண்டுகொள்ளவே இல்லையாம், கடைசியில் அவர் தன்னிடம் இருந்த ஒரு குல்லாவை தலையில் போட்டுக்கொள்ள எல்லா குரங்குகளும் தலையில் போட்டுக்கொண்டதாம், பிறகு அந்த வியாபாரி அதை கீழே தூக்கி போட்டுவிட்டார் அதை பார்த்த எல்லா குரங்குகளும் அதே போன்று தூக்கி எறிந்த அந்த குல்லாக்களை எடுத்துக்கொண்டு அந்த வியாபாரி நடந்து சென்று தனது வியாபாரத்தை செய்தது நினைவுக்கு வருகிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
15-ஜூலை-202018:13:56 IST Report Abuse
madhavan rajan ஆக மோடி செய்தது எல்லாம் தவறு என்று சொல்லிய இந்த பப்பு மோடியைப் பார்த்து காப்பி அடிக்கிறார் என்றால் மோடி செய்யும் செயல்கள் மக்களுக்கு பிடித்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளவே இவருக்கு இவ்வளவு காலம் ஆகியிருக்கு. இனிமே சரியா காப்பி அடிச்சி பாஸ் ஆக எவ்வளவு நாள் ஆகுமோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X