நெல்சன் மண்டேலாவின் மகள் காலமானார்| Dinamalar

நெல்சன் மண்டேலாவின் மகள் காலமானார்

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (2)
Share
Nelson Mandelas, daughter, dies, Zindzi Mandela

ஜோகன்னஸ்பர்க்: நெல்சன் மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்ஸி மண்டேலா மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.

தென் ஆப்ரிக்காவில், இன வெறியை எதிர்த்து போராடியவர், முன்னாள் அதிபர், நெல்சன் மண்டேலா; இவர், 95வது வயதில், 2013ல், காலமானார்; இவரது மனைவி, வின்னி மடிகிசேலாவும், இன வெறியை எதிர்த்து போராடி உள்ளார். இவர், கடந்த 2018ல் காலமானார்.


latest tamil news


மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்ஸி மண்டேலா(59) இன்று காலை ஜோகன்ன்ஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஜிண்ட்ஸி டென்மார்க்கின் தூதராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X