யார் இந்த சச்சின் பைலட்

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
 சச்சின் பைலட் யார்

காங்கிரசின் மறைந்த முக்கியதலைவர்களில் ஒருவரான ராஜேஷ் பைலட்டின் மகன் தான், இந்த சச்சின் பைலட், 42. டில்லி, செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லுாரியில் படித்தவர். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலையில், எம்.பி.ஏ., பட்டப்படிப்பை முடித்தவர்.பி.பி.சி., நிறுவனத்திலும், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திலும் சிறிது காலம் பணியாற்றிய அவர், 26 வயதிலேயே, அரசியலுக்குள் வந்தார்.

2012ல், மன்மோகன் சிங் அமைச்சரவையில், கார்ப்பரேட் துறைக்கான அமைச்சராகவும் பணியாற்றினார்.மத்தியில் ஆட்சியை இழந்து காங்கிரசின் செல்வாக்கு குன்றியதால், 2018ல், ராஜஸ்தான் மாநில அரசியலுக்கு திரும்பி, மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக விளங்கினார்.முதல்வர் பதவியை எதிர்பார்த்தும் கிடைக்காமல் போகவே, துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார்.


latest tamil news




ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில், துணை முதல்வரான தன்னிடம் உள்ள மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை பறிக்க, அசோக் கெலாட் போடும் திட்டமே, பிரச்னைக்கு அடிப்படை காரணம் என, அவர் கூறி வருகிறார். சோனியா குடும்பத்திற்கு நெருக்கமாகவும், ராகுலின் உள்வளைய வட்டத்திற்குள் இருக்கும் மிக முக்கிய இளம் தலைவர்களில் ஒருவருமான, இந்த சச்சின் பைலட், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான, பரூக் அப்துல்லாவின் மகளான சாரா அப்துல்லாவை மணம் முடித்துள்ளார்.

தன் தந்தை ராஜேஷ் பைலட்டைப் போலவே, விமானம் ஓட்டுவதிலும், சினிமா பார்ப்பதிலும் தீவிர விருப்பம் கொண்டிருந்தாலும், ராணுவத்தின் அங்கமான, 'டெரிடோரியல் ஆர்மி'யில், தற்காலிக கவுரவ அதிகாரி எனப்படும் பதவியில், முதன் முதலில் அமர்ந்த அமைச்சர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Ravikumar - chennai ,இந்தியா
14-ஜூலை-202008:50:34 IST Report Abuse
R Ravikumar territorial army ல எப்படி சேர்ந்தார் னு தெரிஞ்ச நல்லா இருக்கும் . அந்த எக்ஸாம் ரொம்ப கடினம் . ஆனால் கவுரவ பதவியாக கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன் . எம் எஸ் தோணி கூட இந்த பதவியில் இருக்கிறார் . கவுரவ பதவி கொடுத்து என்ன செய்ய போகிறார்கள் ? நிறைய இளைஞர்கள் வேலை இன்றி இருக்கிறார்கள் .
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
14-ஜூலை-202007:28:32 IST Report Abuse
நிலா காங் திமுக இரண்டுமே வாரிசு அரசியல் கட்சிகள் இன்னுமா இந்த இரண்டு கட்சிகளை மக்கள் நம்புகிறார்கள்????? வடக்கே காங் அழிவு தெற்கே திமுக அழிவு
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
14-ஜூலை-202007:27:15 IST Report Abuse
நிலா காங் திமுக இரண்டுமே வாரிசு அரசியல் கட்சிகள். அதில் சொகுசு காண்பவர்கள் இவர்கள் இன்னுமா இந்த இரண்டு கட்சிகளை மக்கள் நம்புகிறார்கள்????? வடக்கே காங் அழிவு தெற்கே திமுக அழிவு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X