அரசியல் செய்தி

தமிழ்நாடு

'துப்பாக்கி சூடு விவகாரத்தில் ஸ்டாலின் மவுனம் சரியா?'

Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

கொடுங்கையூர் : ''துப்பாக்கிச் சூடு நடத்திய, தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், நடவடிக்கை எடுக்கவில்லை; கண்டனம் கூட தெரிவிக்கவில்லை,'' என, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

சென்னை, கொடுங்கையூரில், அ.தி.மு.க., சார்பில், 500 பேருக்கு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பங்கேற்ற அவர் அளித்த பேட்டி: ரேஷன் கடைகள் வாயிலாக உணவு பொருட்கள், நிவாரண நிதி; அம்மா உணவகம் வாயிலாக, உணவு வழங்கல் ஆகியவை, மக்களிடம் முழுமையாக சென்றடைந்துள்ளன.சென்னையில், தொற்று பாதிக்கப்பட்ட, 76 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். தண்டையார்பேட்டை மண்டலத்தில், 82 சதவீதம் பேர் குணமாகி விட்டனர்;

தற்போது, 1,331 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில், அலோபதியும் மற்றும் சித்த மருத்துவமும், இரு கண்களாக செயல்படுகின்றன.தி.மு.க., - எம்.எல்.ஏ., துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில், அக்கட்சி தலைவர் ஸ்டாலின், அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை; கண்டனமும் தெரிவிக்கவில்லை. இது போன்ற செயல்களுக்கு, ஊக்கம் அளிக்கவில்லை என்றாவது கூறியிருக்கலாம்; அதுவும் இல்லை. தவிர, அரசாங்கத்தை தாக்குவதை மட்டும், தன் கடமையாக கொண்டுள்ளார். இப்படியே விட்டால், மேலும் பல இடங்களில், துப்பாக்கி கலாசாரம் தலைதுாக்கும். இந்த விவகாரத்தில், சட்டம் தன் கடமையை செய்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் தன் கடமையை செய்வாரா?இவ்வாறு, பாண்டியராஜன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
14-ஜூலை-202015:12:14 IST Report Abuse
Baskar இப்போது வாயை திறந்தால் நம்ம கட்சி நாற்றமெடுத்து விடும் என்று அவருக்கு தெரியும். விரைவில் தேர்தல் வேறு வருகிறது முன்னாடியே கோரோனோ வேறு இதையெல்லாம் தாக்கு பிடிக்க முடியாமல் கிடக்கிறார். கிஷோர் வேறு நேற்று தேர்தல் அறிக்கை விட்டு இருக்கிறான். மண்டையோ குடை குடை என்று குடைகிறது. பாவம் விடுங்கள் என்ன பதில் சொல்லுகிறார் என்று பார்ப்போம்.
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
14-ஜூலை-202008:38:58 IST Report Abuse
நிலா மெளனமே சம்மதத்திற்கு அறிகுறி தானே திமுக கட்சியினர் செய்தது சரி என்று நினைக்கிறார் போல
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜூலை-202006:21:49 IST Report Abuse
Bhaskaran அந்த ச.ம.உ.வுக்கு கலைஞர் விருது தந்து கவுரவப்படுத்துவார்கள் .அல்லக்கை பாரதி ஆதரித்து அறிக்கை விட்டுட்டார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X